இஸ்லாத்தில் பிடித்த விஷயங்கள் என்ன ? யுவன் சங்கர்ராஜா பதில்
இஸ்லாத்தில் பிடித்த விஷயங்கள் என்ன என்ற கேள்விக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா பதிலளித்துள்ளார்.

- News18 Tamil
- Last Updated: May 31, 2020, 4:58 PM IST
யுவன் சங்கர் ராஜா அவரது தாயார் மறைவிற்குப் பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு முஸ்லிமாக மாறியவர், அவரது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக் கொண்டார். இதையடுத்து 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் யுவன் சங்கர்ராஜாவை ஏன் இஸ்லாத்துக்கு மாற்றினீர்கள் என்று நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதிலளித்த யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா ஒரு கட்டத்தில் நான் நேரலையில் எனது கணவரிடம் அவரின் நம்பிக்கை பற்றியும் அவர் ஏன் இஸ்லாமைத் தேர்ந்தெடுத்தார் என்பது பற்றியும் நேரலையில் பேட்டி எடுக்கட்டுமா, அது உங்களுக்கு போதுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையடுத்து யுவனிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம் என்று ஷாஃப்ரூன் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், இஸ்லாத்தில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்திருக்கும் யுவன் சங்கர்ராஜா, “இக்கேள்வியை எதிர்கொண்ட நேரத்தில் என் மனதில் தோன்றிய முதல் விஷயம் யாரும் யாரையும் விட உயர்ந்தவர்கள் இல்லை என்பது தான். நாம் தொழுகைக்குச் செல்லும் போது நம்முடைய வலது, இடது பக்கத்தில் யார் வேண்டுமானாலும் நின்று தொழுகலாம். அப்போது முன்னால் நிற்க வேண்டும் என்று யாருக்கும் தனியாக முன்னுரிமை கிடையாது. இது எனக்குப் பிடித்த முதல் விஷயம்.
மேலும் குர்ஆனில் உங்களுக்கு கிடைத்த விடைகள் என்னென்ன என்ற கேள்விக்கு பதிலளித்த யுவன், “நாம் இறந்தபிறகு ஆன்மா எங்கு செல்கிறது? நம்மைச் சுற்றி ஏன் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன இப்படி நமக்குள் பலவிதமான கேள்விகள் வரும், அப்படி தோன்றிய சமயத்தில் குர்ஆனை எடுத்து ஓதும்போது அதற்கான விடைகள் எனக்கு நேரடியாக கிடைத்தது போல இருந்தது. அதேபோல் வீட்டுக்கு ஒரு தலைவன் நாட்டுக்கு ஒரு தலைவன் இருப்பது போல உலகத்துக்கு ஒரு தலைவன் என்னும் விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது” என்றார்.
மேலும் படிக்க: கொரோனா பாதித்து குஷ்புவின் உறவினர் மரணம் - திரைத்துறையினர் இரங்கல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் யுவன் சங்கர்ராஜாவை ஏன் இஸ்லாத்துக்கு மாற்றினீர்கள் என்று நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதிலளித்த யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா ஒரு கட்டத்தில் நான் நேரலையில் எனது கணவரிடம் அவரின் நம்பிக்கை பற்றியும் அவர் ஏன் இஸ்லாமைத் தேர்ந்தெடுத்தார் என்பது பற்றியும் நேரலையில் பேட்டி எடுக்கட்டுமா, அது உங்களுக்கு போதுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையடுத்து யுவனிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம் என்று ஷாஃப்ரூன் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், இஸ்லாத்தில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.