ரமலானை முன்னிட்டு யுவன் பாடிய ‘யா நபி’ பாடல் ரிலீஸ்...!

Youtube Video

‘யா நபி’பாடல் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது.

 • Share this:
  இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானை முன்னிட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா‘யா நபி’ என்ற பாடலை பாடி வெளியிட்டுள்ளார்.

  இஸ்லாமியர்கள் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகளில் ஒன்று நோன்பு. ரமலான் மாதத்தின் 30 நாட்களில் உண்ணா நோன்பிருந்து தங்களது கடமையை இஸ்லாமியர்கள் நிறைவேற்றி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரமலான் மாதம் துவங்கிய நிலையில், ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிவாசலுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே நோன்பை கடைபிடித்து வருகின்றனர் இஸ்லாமியர்கள்.

  இந்நிலையில் ரமலான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களின் இறுதித் தூதராம் முகம்மது நபி குறித்த 4 நிமிட பாடலைப் பாடி வெளியிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

  இந்தப் பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய "யா நபி" (Sal) புகழ்மாலையை கேட்டு மகிழுங்கள். பாடலை இயற்றி உடன் பாடியிருப்பவர் ரிஸ்வான்” என்று கூறியுள்ளார்.

  யுவனின் இந்தப் பாடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், ‘யா நபி’பாடல் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது.

  Published by:Sheik Hanifah
  First published: