HOME»NEWS»ENTERTAINMENT»yuvan shankar raja rashmika mandanna top tucker music album scs

மியூசிக் வீடியோவில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் ராஷ்மிகா மந்தனா

இசையமைப்பை தவிர, தயாரிப்பிலும் இறங்கிய யுவன், 'பியார் பிரேமா காதல்' என்ற ஹிட் திரைப்படத்தை தயாரித்தார்.

மியூசிக் வீடியோவில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் ராஷ்மிகா மந்தனா
யுவன் - ராஷ்மிகா
  • Share this:

நடிகை ராஷ்மிகா மந்தனா இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் ‘டாப் டக்கர்’ என்ற மியூசிக் வீடியோவில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவரது பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் படு பிரபலம். அதுவும் யுவன் குரலில் அமைந்த மெல்லிசைப் பாடல்கள் கேட்க கேட்க திகட்டாதவை. இசையமைப்பை தவிர, தயாரிப்பிலும் இறங்கிய யுவன், 'பியார் பிரேமா காதல்' என்ற ஹிட் திரைப்படத்தை தயாரித்தார். அதோடு விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடித்து வரும் 'மாமனிதன்' படத்தையும் தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது 'டாப் டக்கர்' என்ற தலைப்பில் ஒரு இசை ஆல்பத்தை தயாரித்துள்ளார்.

யுவனைத் தவிர 'டாப் டக்கர்' இசை ஆல்பத்தில் ராப்பர் பாட்ஷா, ஜோனிதா காந்தி மற்றும் உச்சனா அமித் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ராஷ்மிகா இந்தப் பாடலில் நடனம் மட்டும் ஆடவில்லை, இந்த ஃபாஸ்ட் பாடலுக்காக அவர் தனது குரலையும் கொடுத்துள்ளார்.



தவிர, 'டாப் டக்கர்' படப்பிடிப்பின் போது ரஷ்மிகாவுடன் எடுத்துக் கொண்ட படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் யுவன். இந்த வீடியோ விரைவில் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் யூடியூப் சேனலான ஒய்.ஆர்.எஃப் தளத்தில் வெளியாகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: