• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இளையராஜா - யுவன் காம்போவில் விஜய்சேதுபதி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இளையராஜா - யுவன் காம்போவில் விஜய்சேதுபதி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் சேதுபதி, இளையராஜா, யுவன் சங்கர் ராஜா

விஜய் சேதுபதி, இளையராஜா, யுவன் சங்கர் ராஜா

நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். படத்தை யுவன்சங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் விஜய்சேதுபதியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம், இமைக்கா நொடிகள், 96, ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தன.

    அடுத்ததாக இவர் நடிப்பில் சூப்பர் டீலகஸ், சீதக்காதி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. அதே நேரத்தில் ரஜினிகாந்துடன் பேட்ட படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி யுவன் சங்கர்ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்குகிறார். படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக இன்று நடைபெற்ற படபூஜையில் இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, விஜய்சேதுபதி, சீனுராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இயக்குநர் சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று தேசிய விருதை பெற்றது. இதையடுத்து வெளிவந்த தர்மதுரை படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

    Read also: வடசென்னை: சர்ச்சைக்குரிய முதலிரவுக்காட்சி நீக்கப்படும் - வெற்றிமாறன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: