முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் இணைந்த பியார் பிரேமா காதல் கூட்டணி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மீண்டும் இணைந்த பியார் பிரேமா காதல் கூட்டணி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஹரிஷ் கல்யாண், இளன், யுவன் சங்கர்ராஜா

ஹரிஷ் கல்யாண், இளன், யுவன் சங்கர்ராஜா

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

  • Last Updated :

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின், ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ பியார் பிரேமா காதல்’. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா உள்ளிட்டோர் நடிக்க இளன் இயக்கினார். யுவன் இசையில் படத்தின் பாடல்கள் ஒருபுறம் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. இந்த வெற்றிக்கு பரிசாக தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, படத்தின் இயக்குனர் இளனுக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தார். இந்நிலையில் இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

மேலும் யுவன் -இளன் - ஹரிஷ் கல்யாண் கூட்டணி இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ஹீரோவின் குழந்தைப்பருவம், இளமை உள்ளிட்ட 3 காலங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஹரிஷ் கல்யாண் உடன் ஏற்கெனவே இணைந்து பணியாற்றியிருப்பதால் அவரைப்பற்றி நன்கு தெரியும் என்பதாலும் அவருடன் மீண்டும் இணைந்திருப்பதாக இளன் கூறியுள்ளார். மேலும் இந்தப் படம் ஒரு மியூசிகல் ஃபிலிம் என்பதால் பியார் பிரேமா காதல் திரைப்படத்தை விட அதிக பாடல்கள் இருக்கும் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பிக்பாஸ் கவினுக்கு கல்யாணமா? மணப்பெண் பற்றி வெளியான தகவல்

இந்தப் படத்தின் படப்பிடிப்பை மும்பை, சென்னை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஷூட்டிங் செல்ல உள்ளதாகவும் தெரிகிறது.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    First published:

    Tags: Harish Kalyan, Kollywood, Yuvan Shankar raja