• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிவகார்த்திகேயன் தங்கை கேரக்டரில் நடிக்கும் யூடியூப் பிரபலம்?

சிவகார்த்திகேயன் தங்கை கேரக்டரில் நடிக்கும் யூடியூப் பிரபலம்?

வேலைக்காரன் படத்துக்கு பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தில் அவரது தங்கை கதாபாத்திரத்தில் யூடியூப் மூலம் பிரபலமான நடிகை ஒருவர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷின் படத்தில் நடித்து வருகிறார். வேலைக்காரன் படத்துக்குப் பின் அவருக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படம் காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது.

    ‘தளபதி 63’ கெட்-அப் உடன் திருமணத்துக்கு வந்த விஜய் - வைரலாகும் புகைப்படம்

    இந்தப் படத்துக்கு மிஸ்டர் லோக்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று மாலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கை கதாபாத்திரத்தில் யூடியூப் மூலம் பிரபலமான எரும சாணி ஹரிஜா நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கெனவே அதர்வா நடித்து வரும் ‘100’ மற்றும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ராமதாஸ், அன்புமணியால் சித்ரவதை...குருவின் மகன் கனலரசன் பேட்டி - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: