திறமையான பாடகரா நீங்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் தரும் அதிரடி வாய்ப்பு

news18
Updated: September 14, 2018, 6:35 PM IST
திறமையான பாடகரா நீங்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் தரும் அதிரடி வாய்ப்பு
ஏ.ஆர்.ரஹ்மான்
news18
Updated: September 14, 2018, 6:35 PM IST
``சிறந்த பாடகரை தேடிக் கொண்டிருக்கின்றேன். அது நீங்கள் தான் என்றால் உங்களது விண்ணப்பங்களை அனுப்புங்கள்” என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் பலரும் தங்களது விவரங்களை அனுப்பி வருகின்றனர்.

இசையில் ஆஸ்கர் வரை உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரஹ்மான் படங்கள் ஆல்பங்களுக்கு இசையமைப்பதை தாண்டி இசைத்துறையில் பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறார். இதுதவிர இளம்பாடகர்களுக்கு அவரது படங்களில் வாய்ப்பளித்தும் வருகிறார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், ``இசையின் மீது உங்களுக்கு உள்ள ஆர்வம் உண்மையென்றால், இதோ உங்களுக்கான மிகப் பெரிய வாய்ப்பு. நானும் யூ-டியூப் இந்தியாவும் இணைந்து அடுத்த சிறந்த பாடகரை தேடிக்கொண்டிக்கிறோம். அது நீங்கள்தான் என்றால், உங்களது விண்ணப்பங்களை அனுப்புங்கள்” என்று கூறியுள்ளார்.

 அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போல, யூடியூப் தளமும் தனது நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு `ARRived’ என பெயரிடப்பட்டுள்ளது.  ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு மாதத்துக்குள் வெளிவர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...