திரௌபதி பட இயக்குனர் மீது யூ-டியூப் சேனல் தொகுப்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

திரௌபதி பட இயக்குனர் மீது யூ-டியூப் சேனல் தொகுப்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
திரௌபதி பட இயக்குனர் மோகன்
  • Share this:
திரௌபதி பட இயக்குனர் மோகனின் ஆதரவாளர்கள் தொகுப்பாளர் விக்ரமன் குறித்து அவதூறாக செய்திகளை பரப்புவதாகவும், தனது அலைபேசி எண்ணிற்கு தொடர்ந்து மிரட்டல் விடுவதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பிப்ரவரி 5-ம் தேதி கலாட்டா டாட்காம் என்கிற இணையதள ஊடகத்தில் திரௌபதி திரைப்படத்தின் இயக்குனர் மோகனிடம் தொகுப்பாளர் விக்ரமன் நேர்காணல் நடத்திய போது மோகன் பாதியிலேயே எழுந்து செல்வது போன்று ஒளிபரப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் அவரது டிவிட்டர் பக்கத்தில்,’கலாட்டா டாட் காம் அலுவலகத்திற்கு சென்று நான் நேர்காணலை முடித்து சென்ற வீடியோவை ஒளிபரப்பாமல் பாதியிலேயே எழுந்து செல்வது மட்டும் ஒளிபரப்பப்பட்டது  ஏன் என்று கேள்வி எழுப்பிய வீடியோவை பதிவிட்டார்.


இதனைத்தொடர்ந்து மோகனின் ஆதரவாளர்கள் தொகுப்பாளர் விக்ரமன் குறித்து அவதூறாக செய்திகளை பரப்புவதாகவும், தனது அலைபேசி எண்ணிற்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் திரௌபதி திரைப்படத்தின் இயக்குனர் மோகன் மீது புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மோகனின் ஆதரவாளர்கள் தன்னையும் தன் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் தன் மீது அவதூறு பரப்புவதோடு தன் சாதி குறித்து கேள்வி எழுப்பி தன்னை ஒரு அமைப்பின் பிரதிநிதியாக சித்தரிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

Also see...
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading