Shalu Shammu: "நான் ஹன்சிகா இல்ல, நீ ஷாருக்கானா?" - கிண்டலுக்கு நச் பதிலடி கொடுத்த இளம் நடிகை!

ஷாலு ஷம்மு

சுயாதீன படாலான காத்தாடி போல பாடலுக்கு ரீல் செய்திருந்தார். அவரின் இந்த வீடியோ சுமார் 5 ஆயிரத்துக்கும் மேலான லைக்குகளையும், 5 லட்சத்துக்கும் மேலான பார்வைகளையும் கடந்திருந்தது.

  • Share this:
வருத்தப்படாத வாலிபர் சங்க படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்த ஷாலு சாமு, மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திலும் மிகச்சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூகவலைதளங்களிலும் பதிவிட்டு வருகிறார். அண்மையில் தாவணி பாவடை காஸ்டியூமில், கிராமத்து கிளியாகவும், அதில் கொஞ்சம் கிளாமராக இருக்குமாறு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். மார்டன் காஸ்டியூம்களிலும் சூப்பர் லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார்.

சுயாதீன படாலான காத்தாடி போல பாடலுக்கு ரீல் செய்திருந்தார். அவரின் இந்த வீடியோ சுமார் 5 ஆயிரத்துக்கும் மேலான லைக்குகளையும், 5 லட்சத்துக்கும் மேலான பார்வைகளையும் கடந்திருந்தது. அவரின் இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு கீழ் ’அன்பு’ என்ற ஐடியில் நெட்டிசன் ஒருவர் ஷாலு சம்முவை ஹன்சிகாவுடன் ஒப்பிட்டு நக்கலாக ஒருமையில் கமெண்ட் அடித்திருந்தார். நெட்டிசனின் கமெண்டில், ‘ நீ ஒன்னும் ஹன்சிகா மோத்வானி இல்லையே?.. உன்னுடைய எதிர்காலத்துக்காக அவரை போல பிகேவ் பன்னு, நா உனக்கு வெல்விஷரா இருக்கேன் என கூறியிருந்தார். இதில் கடுப்பான ஷாலி சாமு, தன்னுடைய நச் பதிலடியால் அவரை ஆப் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்து ஷாலு எழுதிய பதிவில், "நான் யாரைபோலவும் இல்லை, நான் எப்படி இருக்க வேண்டும் அல்லது பிகேவ் செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது. என்னுடைய எதிர்காலம் என்பது என்னுடைய பிரச்சனை, அதில் உனக்கு எந்த வேலையும் இல்லை, என்னை நான் யாருடனும் கம்பேர் செய்வது கிடையாது. ஆனால், உன் மனசுல ஷாருக்கான், அஜீத், விஜய் என்ற நினைப்பு இருக்கும்போல, நீ எனக்கு வெல்விஷரா இருப்பது பரிதாபமாக இருக்கிறது" என அட்டாக் செய்துள்ளார்.







இந்த ஸ்கிரீன்ஷாட்டை பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸில் பதிவிட்டுள்ள அவர், யாரையும் யாருடனும் கம்பேர் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென தனித்துவமான குணங்கள் இருக்கும் என்றும் ஷாலு சம்மு கூறியுள்ளார். ஆபாசமான பதிவுகள், கமெண்டுகளுக்கு நச்சுனு பதிலடி கொடுக்க ஷாலு சாமு ஒருபோதும் தயங்கியதே இல்லை. யார் எப்படி பேசுகிறார்களோ? அதற்கு ஏற்ப அவருடைய பதிலடியும் சமூகவலைதளங்களில் சூடாக இருக்கும்.

Also read... Unseen Pic : மெட்டி ஒலி நடிகைகள் ஒன்றாக இருக்கும் புகைப்படம்!

அண்மையில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடியனார். கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ஆபாசமாக வந்த கேள்விகளுக்கு அதற்கு தகுந்தாற்போல அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுத்தார். ஷாலு சாமுவின் டைரக்ட் அட்டாக் பாணி ரசிகர்களுக்கும் பிடித்துள்ளது. மேலும், அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிக்கும் ஏராளமானோர், வெள்ளித்திரையில் ஹிட் அடிக்க வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: