வெற்றிகரமாக 300 எபிசோட்களை நிறைவு செய்த நீ தானே என் பொன்வசந்தம் சீரியல்!

நீ தானே என் பொன்வசந்தம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் கடந்த மே 12ம் தேதியோடு வெற்றிகரமாக 300 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது.

  • Share this:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல  'நீ தானே என் பொன்வசந்தம்' சீரியல் கடந்த மே 12ம் தேதியோடு வெற்றிகரமாக 300 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது. இந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெய் ஆகாஷ் என்கிற ஜெய் ஆகாஷ் நாகேஸ்வரன் தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் தங்களது சீரியலுக்கு ஆதரவு தந்த அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். தனது வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, " உங்கள் தொடர்ச்சியான ஆதரவு எனது நன்றி. என் இதயத்தில் உள்ள அனைத்து அழகான மக்களுக்கும் குட்நைட் மற்றும் ஸ்வீட் ட்ரீம்ஸ்" கேப்சன் செய்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Jaiakash Nageswaran (@jaiakash252)


மேலும், சீரியல் 300 எபிசோட் கடந்ததை கொண்டாடும் வகையில், சீரியலின் பேன் பேஜ் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டது. அந்த பதிவிற்கு நடிகர் ஜெய் ஆகாஷ் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, " என் இதயத்தில் உள்ள அனைத்து அழகான மக்களும் தெரிவித்த வாழ்த்துக்களுக்கு நன்றி. 300 வது எபிசோடுகள் கடந்ததற்காக அழகான வீடியோ எடிட் செய்த ரசிகருக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

  
View this post on Instagram

 

A post shared by Jaiakash Nageswaran (@jaiakash252)

கடந்த ஆண்டு பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காதல் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது ஜீ மராத்தி தொலைக்காட்சி தொடரான துலா பஹ்ட் ரே என்ற தொடரின் மறுதயாரிப்பாகும். இந்த தொடர் பூவே பூச்சூடவா என்ற தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு பதிலாக இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்படுகின்றது. இந்த தொடரில் தமிழ் திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் என்பவர் சூரிய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் காதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தர்சனா அசோகன் என்ற புதுமுக நடிகை அனு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார்.

சமீபத்தில், நீதானே எந்தன் பொன்வசந்தம்  அதன் பிரபலமான ப்ரோபோசல் காட்சி மூலம் சமூக ஊடகங்களில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். கதையின்படி, கதாநாயகன் சூர்யபிரகாஷ் (ஜெய் ஆகாஷ்) கதாநாயகி அனு (தர்ஷனா)-வை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று, நடுவானில் ப்ரொபோஸ் செய்கிறார். கோடீஸ்வரர் சூர்யபிரகாஷின் கதைதான் நீ தானே எந்தன் பொன்வாசந்தம்.


இந்த தொடரின் கதை 20 வயாதான நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அனு என்ற பெண்ணும் 40 வயதான பணக்கார குடும்பத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற தொழிலதிபருக்கு இடையில் எப்படி காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிகிறது என்பது தான் கதை. இந்த சீரியலில் ஜெய் ஆகாஷ் (சூர்யபிரகாஷாக), தர்ஷனா அசோகன் (அனு), கார்த்திக் சசிதரன் (சந்திரபிரகாஷ்), நிவாஷினி திவ்யா (மீரா), சத்தியபிரியா (ஷரதா), சுபிக்ஷா கயாரோசனம் (போயன்), சைராம் (சுப்பிரமணியம்) மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: