EXCLUSIVE: இணையத்தை கலக்கும் ‘மணிகே மாகே ஹிதே’ பாடல் உருவானது இப்படித்தான்! யோஹானி சிறப்பு நேர்காணல்

யோஹானி

இசைக்கு கலாச்சாரங்கள் அல்லது எல்லைகள் இல்லை. பாடல்களைப் புரிந்து கொள்ளாதவர்கள், பாடலை நேசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 • Share this:
  ’மணிகே மாகே ஹிதே’ என்ற பாடல் வைரல் ஹிட்டானதைப் பற்றி, அதன் பாடகி யோஹானி நியூஸ் 18 உடன் பகிர்ந்துக் கொண்டார்.

  சமீப நாட்களில் நீங்கள் எப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நோட்டமிட்டாலும், அதில் பலரின் பின்னணிப் பாடலாக ‘மணிகே மாகே ஹிதே’ என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இந்த பாடல் இந்திய சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான தேடல்களைக் கொண்டிருக்கிறது. இந்த வைரல் ரீல் டிராக்கிற்கு பின்னால் உள்ள பாடகி 28 வயதான இலங்கை இசைக்கலைஞர் யோஹானி.

  இலங்கை மற்றும் இந்தியா இரண்டிலும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாடல் கடந்த 3 மாதங்களில் 9.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. நியூஸ் 18 உடனான பிரத்யேக நேர்காணலில், யோஹானி தனது வாழ்க்கை மற்றும் ஒரே இரவில் பாடல் எப்படி வைரல் ஆனது என்பது குறித்து பேசினார்.

  ‘மணிகே மகே ஹிதே’ நிகழ்ந்தது எப்படி?

  இது டிக்டோக் வீடியோவுடன் தொடங்கியது. எனது தொலைபேசியில், ஒரு பியானோவுடன் பாடலை உருவாக்கினேன். அது நன்றாக இருந்தது, பின்னர் - பாடலின் தயாரிப்பாளர், சமத் சங்கீத் என்னை அழைத்து, “நீங்கள் முழு பாடலையும் பாட விரும்புகிறீர்களா?” என்றார். பாடலை சதீஷன் ரத்நாயகா பாடியுள்ளார், டுகன் ஏஆர்எக்ஸ் வரிகளை எழுதினார்.  3 மாதங்களில் இந்தப் பாடல் 9.2 கோடி பார்வைகளைப் பெறும் என கற்பனை செய்தீர்களா?

  முற்றிலும் இல்லை. இது இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. நாங்கள் அதற்காக திட்டமிடவும் இல்லை. நாங்கள் பாடலை உருவாக்க விரும்பியதால், அதை செய்ய விரும்பினோம். ஆனால் அதில் வரும் பதிலை நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

  வைரல் பாடலை படமாக்கும் முன் ஒத்திகை பார்த்தீர்களா?

  இல்லவே இல்லை. இது முற்றிலும் திட்டமிடப்படாதது, நான் இசையின் ஓட்டத்துடன் சென்றேன்.

  எல்லாராலும் பாடல் வரிகளை புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் எல்லோரும் இன்னும் பாடலை விரும்புகிறார்கள். இது எதை காட்டுகிறது?

  இசைக்கு கலாச்சாரங்கள் அல்லது எல்லைகள் இல்லை. பாடல்களைப் புரிந்து கொள்ளாதவர்கள், பாடலை நேசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் எனது இசை மக்களை இணைப்பதில் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

  அடுத்த சில ஆண்டுகளில் நீங்கள் எங்கே இருப்பீர்கள்?

  இசை என் வாழ்க்கை. எனது அடுத்த ஆல்பத்தை கொண்டு வர விரும்புகிறேன், முதல் 12 பாடல்கள் ஏற்கனவே தயாராக உள்ளன. கோவிட் அனுமதித்தால், நான் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் இசை சுற்றுப்பயணங்களையும் செய்ய விரும்புகிறேன். இது தான் அடுத்த சில ஆண்டுகளுக்கு எனது இலக்கு.  அமிதாப் பச்சன் ட்விட்டரில் உங்களைப் பாராட்டியபோது எப்படி இருந்தது?

  இது மிகவும் வேடிக்கையான கதை. நான் தூங்கிக்கொண்டிருந்தேன், என் மேலாளர் என்னை அழைத்து, ‘அமிதாப் பச்சன் உங்கள் பாடலை ட்வீட் செய்துள்ளார்’ என்றார். என் மனம் அதைப் பதிவு செய்யவில்லை, அதனால் நான் மீண்டும் தூங்கச் சென்றேன். திடீரென்று என்னை உணர்ந்தபோது, நான் விழித்துக்கொண்டேன், அவர் யாரைச் சொன்னார் என்பதை உணர்ந்தேன்! இது ஒரு கனவு நனவாகிய தருணம். சில நேரங்களில் நான் இன்னும் கனவு காண்பது போல் உணர்கிறேன். என்றாவது ஒருநாள் நான் அவருக்கு முன்னால் நேரடியாக பாடுவேன் என்று நம்புகிறேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பரினிதி சோப்ரா போன்ற பாலிவுட் நட்சத்திரங்களும் உங்கள் பாடலுக்கு நடனமாடினர். இதை எப்படி உணர்கிறீர்கள்?

  ஆச்சரியமாக இருக்கிறது. எனது பாடலை பல மூத்த நட்சத்திரங்கள் விரும்பியதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.  நீங்கள் இந்தியாவுக்கு வருகை தர விரும்புகிறீர்களா?

  ஆமாம், நாங்கள் இந்தியாவில் சிறிய நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தியுள்ளோம். நான் அங்கு சென்று ஒரு பெரிய சுற்றுப்பயணம் செய்ய விரும்புகிறேன், ‘மணிகே மகே ஹிதே’வை நேசித்த மக்களை நேரில் அணுக வேண்டும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: