யோகி பாபு, யாஷிகா ஆனந்த் இணைந்து நடிக்கும் படம் 3-டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது.
சர்கார் தொடங்கி 2018-ம் ஆண்டு வெளியான அதிக படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தவர் யோகி பாபு. 2019-ம் ஆண்டில் யோகி பாபு நடிப்பில் கூர்கா, தர்ம பிரபு உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் அறிமுக இயக்குநர் விநாயக் சிவா இயக்கும் படமும் இணைந்துள்ளது. NO.1 Productions தயாரிக்கும் இந்தப் படம் அடல்ட் ஹாரர் காமெடி படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் யோகி பாபுவுடன் நடிகை யாஷிகா ஆனந்த், மற்றும் நிக்கி தம்போலி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் விநாயக் சிவா கூறுகையில், இந்தப் படத்தை அடல்ட் ஹாரர் காமெடி படம் என்று சொல்வதைவிட குறும்பு வகையிலான படம் என்று கூறலாம். யார் மனதையும் புண்படுத்தும் வகையிலான அருவருப்பான காட்சி மற்றும் வசனங்கள் இருக்காது. கிராபிக்ஸ் 3டி தொழில்நுட்பம் மூலம் திகிலான பயமுறுத்தும் புதிய அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளோம் என்று கூறினார்.
ரஜினிகாந்தின் 2.0 படத்தில் பணியாற்றிய பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப் படத்தில் பணிபுரிய உள்ளனர். இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் அடல்ட் ஹாரர் காமெடி படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கஜா கலவரம்: தலைமறைவான மகன் தற்கொலை மிரட்டல்... தாய் கண்ணீர் - வீடியோ
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.