கடற்கொள்ளையனாக நடிக்கும் யோகி பாபு - மாட்டிக் கொண்டு முழிக்கும் பிரபலங்கள்

கடற்கொள்ளையனாக நடிக்கும் யோகி பாபு - மாட்டிக் கொண்டு முழிக்கும் பிரபலங்கள்

யோகி பாபு

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு கடற்கொள்ளையனாக நடித்து வருகிறார்.

  • Share this:
அறிமுக இயக்குநர் பிரபு ராம் இயக்கத்தில் மஹத் வட சென்னை இளைஞராகவும், அவரது காதலியாக ஐஸ்வர்யா தத்தாவும் இவர்களுடன் மொட்டை ராஜேந்திரனும் நடிக்கும் திரைப்படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா ’.

ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தற்போது தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு கடற்கொள்ளையனாக நடித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து படக்குழு விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தற்போதைய தமிழ் சினிமாவின் காமெடி நாயகனாக வலம் வரும் யோகி பாபு, இந்தப் படத்தில் புதையலை தேடும் கடற்கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) வாக நடிக்கிறார்.இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் படத்தின் அனைத்து கதாப்பத்திரங்களும் ஒரு ரிசாட்டிற்குள் இந்த வித்தியாசமான கதாப்பாத்திரத்திடம் மாட்டிக்கொண்டு முழிப்பது பெரும் காமெடி கலாட்டாவா அமைக்கப்பட்டிருக்கிறது.இவையனைத்தும் ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) கதாப்பாத்திரம் மீது பரிதாபம் தோன்றுவதாகவும் அது மேலும் நகைச்சுவை உண்டாக்கும்படியும் கதை அமைக்கப்பட்டுள்ளது. மஹத், ஐஸ்வர்யா, யோகிபாபு கூட்டணியுடன் நடிகை சாக்‌ஷி அகர்வால் கண்கவர் பாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: