ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி.. நடிகை டாப்ஸி படத்தில் இணைந்தார் யோகி பாபு..

கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி.. நடிகை டாப்ஸி படத்தில் இணைந்தார் யோகி பாபு..

யோகி பாபு | டாப்ஸி

யோகி பாபு | டாப்ஸி

காமெடிக்கு முக்கியத்துவமுள்ள படத்தில் டாப்ஸியுடன் இணைந்து நடிக்க யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த டாப்ஸி பாலிவுட்டில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். பிஸியாக வலம் வரும் டாப்ஸி தான் தனது கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று காத்திருந்து அவரது தேதிகளை கைப்பற்றியுள்ளார் அறிமுக இயக்குநர் தீபக் சுந்தரராஜன். இவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சுந்தர்ராஜனின் மகன். மேலும் தீபக் இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் முதல் படமே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் டாப்ஸியுடன் விஜய் சேதுபதியும் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். தற்போது இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் காமெடியில் அசத்தியிருந்த யோகி பாபு, விரைவில் டாப்ஸியுடன் வலம் வர இருக்கிறார். மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிகர் ஜெகபதிபாபு நடிக்கிறார்.

    ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஜெய்ப்பூரில் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கேயே முடித்துவிட்டு தமிழகம் திரும்பும் திட்டத்தில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக நடிக்கும் சயிஃப் அலிகான்..

    நடிகை டாப்ஸி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கேம் ஓவர்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக தற்போது காமெடி படத்தில் நடித்து வரும் டாப்ஸி, அடுத்ததாக ஜெயம்ரவியுடன் ஜனகனமன படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor vijay sethupathi, Actor Yogibabu, Taapsee Pannu