யோகிபாபுவின் திருமணம் குறித்து ஒரு புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகை சபீதா ராய் விளக்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபகாலமாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமாகி வரும் காமெடி நடிகர் யோகிபாபு. கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்கு பின் 'மோஸ்ட் வான்டட்' நடிகராக மாறிவிட்டார். ரஜினிகாந்த், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் யோகி பாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் ஒரு பெண்ணுடம் எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலானது. யோகி பாபுவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் காட்டுத் தீயாய் பரவின.
உடனடியாக இதுகுறித்து தனது ட்விட்டரில் மறுப்பு தெரிவித்த யோகி பாபு, “என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன்.” என்றார்.
இந்நிலையில் அந்தப் புகைப்படத்தில் யோகிபாபுவுடன் இருக்கும் பெண் யார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.
புகைப்படத்தில் இருப்பது நான் தான் என்று கூறி வீடியோ வெளியிட்டிருக்கும் நடிகை சபீதா ராய், “கடந்த 2 நாட்களாக என்னுடைய பெயரும், யோகி பாபுவின் பெயரும் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் இருப்பது நான் தான். ஆனால் இதற்கு அழுவதா, சிரிப்பதா எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. யோகி பாபு இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார். இது முற்றிலும் வதந்தியே. உண்மையில்லை.
நான் எதுவும் சொல்லவில்லையே என்று பலரும் கேட்டதால் தான் இந்த வீடியோ வெளியிடுகிறேன். கடந்த 2017-ம் ஆண்டு கன்னிராசி படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். அப்போது நான் கேட்டுக் கொண்டதன் பேரில் எடுத்த செல்ஃபி புகைப்படம் தான் அது. நல்ல நடிகராக, காமெடி நடிகராக அவரை எனக்குப் பிடிக்கும்.
லிசா படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தேன். காக்டெயில், ராஜவம்சம் ஆகிய படங்களிலும் அவருடன் நடித்திருக்கிறேன். எனவே தயவுசெய்து போலியான செய்தியை பரப்பாதீர்கள். நம்பாதீர்கள். அவருடைய பெயரையும் என்னுடைய பெயரையும் கெடுக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Yogi babu