• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் - அட்லீ கூட்டணியில் இணையும் `விஸ்வாசம்’ நடிகர்

விஜய் - அட்லீ கூட்டணியில் இணையும் `விஸ்வாசம்’ நடிகர்

இயக்குநர் அட்லீயுடன் விஜய்

இயக்குநர் அட்லீயுடன் விஜய்

விஜய் 63 படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    விஜய் 63 படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சர்கார் படத்தை அடுத்து நடிகர் விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் விவேக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மெர்சல் பட பாடலாசிரியரும் இந்தப் படத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நாளிலேயே ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கான செட் அமைக்கும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “உலகின் சிறந்த திறமையாளர்களால் உருவாக்கப்படும் தளபதி 63 இதுவரை வெளிவந்த விஜய் திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. ஏனைய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவகாரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விவேக்குடன், யோகிபாபுவும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக மெர்சல் மற்றும் சர்கார் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த யோகி பாபு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்துள்ளார்.

    பற்றி எரிந்த தீப்பெட்டி பண்டல்கள்: லாரியை குளத்தில் இறக்கி உயிர்தப்பிய ஓட்டுநர் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: