தளபதி 65 படத்தில் இணையும் முன்னணி நடிகர்?

தளபதி 65 படத்தில் இணையும் முன்னணி நடிகர்?

நடிகர் விஜய்

தளபதி 65 படத்தில் விஜய்யுடன் முன்னணி நகைச்சுவை நடிகர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்திருக்கும் நிலையில் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய்.

இத்திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும், அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாகவும், பூவையார் மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு தளபதி 65-ல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மெர்சல், சர்கார், பிகில் திரைப்படத்தை அடுத்து நான்காவது முறையாக விஜய் - யோகி பாபு கூட்டணி இணைய இருக்கிறது. நெல்சன் திலீப் குமார் இயக்குநராக அறிமுகமான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபுவுக்கு முதன்மை கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் படத்தில் அவரது கேரக்டர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

மேலும் படிக்க: இயக்குநராக அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்!

விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தாலும் படக்குழு இன்னும் மவுனம் காத்து வருகிறது. விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Sheik Hanifah
First published: