Home /News /entertainment /

மீண்டும் அஜித்துடன்... வலிமை படம் குறித்து ரகசியம் உடைத்தார் யோகி பாபு!

மீண்டும் அஜித்துடன்... வலிமை படம் குறித்து ரகசியம் உடைத்தார் யோகி பாபு!

யோகி பாபு (கோப்புப்படம்)

யோகி பாபு (கோப்புப்படம்)

‘வலிமை’ திரைப்படத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார். 

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் அவருடன் நடிக்கும் நடிகர்களின் தகவல்கள் வெளியாகாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தை அடுத்து வலிமை திரைப்படத்திலும், அஜித்துடன் கரம் கோர்த்துள்ளார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு.

இதுகுறித்து யோகி பாபுவிடம் நாம் விசாரித்த போது, வலிமை திரைப்படத்தில் நடிப்பது உண்மைதான். ஆனால் தற்போது அரண்மனை 3 படத்துக்காக குஜராத் படப்பிடிப்பில் உள்ளேன். விரைவில் வலிமை படத்தில் இணைந்து நடிக்க உள்ளேன்” என்றார்.

மேலும் படிக்க: மாஸ்டரின் குட்டி ஸ்டோரியைப் பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்!

வலிமை திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே அதாவது, நவம்பர் 12-ம் தேதி அன்றே திரைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியானது கங்கனா ரனாவத்தின் ”தலைவி” நியூலுக்..!
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Ajith, Valimai, Viswasam, Yogi babu

அடுத்த செய்தி