ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜயகாந்தை சந்தித்த நடிகர் யோகி பாபு!

விஜயகாந்தை சந்தித்த நடிகர் யோகி பாபு!

விஜயகாந்த் உடன் யோகி பாபு

விஜயகாந்த் உடன் யோகி பாபு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 5-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இவருக்கும் பார்கவி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் குலதெய்வ கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன், மணமகளின் வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தான் கால்ஷீட் கொடுத்திருந்த படங்களில் நடித்து முடித்த யோகி பாபு, திரைத்துறை பிரபலங்களை அழைத்து சிறப்பாக தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் 5-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை நடிகர் யோகி பாபு கொடுத்தார். அப்போது விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், இயக்குநர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க: பப்புக் குட்டிக்கு, குட்டி பப்பு...! சஞ்சீவ் - ஆல்யா மானஷா தம்பதிக்கு பெண் குழந்தை

First published:

Tags: Vijayakanth, Yogi babu