தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் குறுகிய காலத்தில் தனது திறமையினால் உச்சத்தை தொட்டவர் என்று கூறலாம். இவர் அஜித்துடன் இணைந்து வேதாளம், விஜய்யுடன் சர்கார் இப்படி பல மாஸ் ஹீரோ படங்களில் காமெடியானாக நடித்து திரையரங்குகளை தனது நகைச்சுவையால் அதிர வைத்துள்ளார்.
பல படங்களில் பிசியாக நடித்து வந்த யோகி பாபு, எப்பதான் கல்யாணம் செய்துக்கொள்ளப் போகிறார் என திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் கேள்வி இருந்தது. இதையடுத்து பிப்ரவரி 5 ஆம் தேதி மஞ்சு பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு திருத்தணி முருகன் கோயிலில் முக்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார்.
திருமண வரவேற்பு விழாவை பிரம்மாண்டமாக ஏப்ரல் மாதத்தில் நடத்த யோகி பாபு திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கால் இது சாத்தியமில்லாமல் போனது.
நண்பன் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை... மிகவும் மகிழ்ச்சி... தாயும் சேயும் நலம்...
இந்நிலையில், இன்று நடிகர் யோகி பாபு - மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், யோகி பாபுவிற்கு திரைப்பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோ பாலா ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘நண்பன் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை. மிகவும் மகிழ்ச்சி. தாயும் சேயும் நலம்.’ என பதிவிட்டுள்ளார்.