லெஜென்ட் சரவணனுடன் பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு

லெஜென்ட் சரவணனுடன் பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு

படப்பிடிப்பின் போது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் உடன் சேர்ந்து யோகி பாபு தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

 • Share this:
  சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கேக் வெட்டி யோகி பாபுவின் பிறந்தநாளை கொண்டாடினர்.

  யோகி பாபுக்கு இது முக்கியமான வருடம். அவர் நடித்த மண்டேலா திரைப்படம் 2021 முதல் அரையாண்டில் உலகளாவில் வெளியான சிறந்த 25 படங்களின் பட்டியலில் 17 வது இடத்தைப் பிடித்தது.  படம் வெளியாகி 100 தினங்கள் நிறைவடைந்ததை சமீபத்தில் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவர் தனி நாயகனாகவும், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்த பல படங்கள் இந்த வருடம் வெளியாக உள்ளன. கடந்த 22 ஆம் தேதி தனது பிறந்தநாளை யோகி பாபு கொண்டாடினார்.  சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் ஹீரோவாக நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில் யோகி பாபு முக்கிய வேடம் ஏற்றுள்ளார். உல்லாசம், விசில் படங்களை இயக்கிய பிரபல விளம்பரப்பட இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி இந்தப் படத்தை இயக்குகின்றனர். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களையும் இவர்களே இயக்கி வந்தனர்

  Photos : இன்ஸ்டாவில் அசத்தும் ப்ரியா பவானி சங்கர் போட்டோஸ்

  இந்தப் படத்தின் படப்பிடிப்பில் யோகி பாபுவின் பிறந்தநாளை சரவண் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: