மணிரத்னம் தயாரிக்கும் வலைத்தொடரில் யோகிபாபு ஹீரோவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்து விட்டார் யோகி பாபு. தற்போது அவர் இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக இயக்குநர் மணிரத்னம் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை தயாரிக்கிறார். இதனை அரவிந்த் சுவாமி, பிஜாய் நம்பியார், கெளதம் வாசுதேவ் மேனன், ஹலிதா ஷமீம், கே.வி. ஆனந்த், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், பொன்ராம், ரதிந்திரன் ஆர்.பிரசாத் ஆகியோர் இயக்குவதாக் அறிவிக்கப்பட்டது. தற்போது இதில் சின்னதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அதாவது இயக்குநர் பொன்ராமுக்கு பதில், தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியதர்ஷன் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளாராம். அவர் இயக்கும் கதையில் ஹீரோவாக யோகி பாபு நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்