• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Yogi Babu: யோகி பாபு, மிர்ச்சி சிவா - மீண்டும் இணைந்த சிரிப்புக் கூட்டணி...!

Yogi Babu: யோகி பாபு, மிர்ச்சி சிவா - மீண்டும் இணைந்த சிரிப்புக் கூட்டணி...!

யோகி பாபு, மிர்ச்சி சிவா

யோகி பாபு, மிர்ச்சி சிவா

உலக அளவில் அதிகப் படங்களில் நடித்து வருகிறவர் பட்டியலில் தற்போது யோகி பாபு முதலிடத்தில் உள்ளதாக தகவல். பீஸ்ட், அரண்மனை 3 உள்பட சுமார் 24 படங்களில் நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
யோகி பாபு, மிர்ச்சி சிவா இருவரும் கலகலப்பு முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் இணைந்து நடித்தனர். இவர்கள் இணைந்து நடித்த மற்றொரு திரைப்படமான சுமோ இன்னும் வெளியாகாமல் உள்ளது. நான்காவது முறையாக ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் இந்த கலகலப்பு கூட்டணி இணைந்திருக்கிறது.

ஜெயம்கொண்டான் படத்தின் மூலம் இயக்குனரான கண்ணனிடம் ஒரு நல்ல குணம். யார் தனது படத்தைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தொடர்ச்சியாக படம் இயக்குவதை மட்டும் விடுவதில்லை. இந்த வருடம் படம் பார்க்கும் வேகத்தைவிட விரைவாக படங்களை இயக்கி வருகிறார். அவர் இயக்கத்தில் தள்ளிப் போகாதே, பிஸ்கோத்து என இரு படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. எரியும் கண்ணாடி என்ற படம் தயாராகி வருகிறது. அது முடிவதற்குள் இதோ, யோகி பாபு, மிர்ச்சி சிவா கூட்டணியை பிடித்துப் போட்டிருக்கிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக அளவில் அதிகப் படங்களில் நடித்து வருகிறவர் பட்டியலில் தற்போது யோகி பாபு முதலிடத்தில் உள்ளதாக தகவல். பீஸ்ட், அரண்மனை 3 உள்பட சுமார் 24 படங்களில் நடிக்கிறார். ஆர்.கண்ணனின் படம் 25. இதில் நகைச்சுவை வேடம், கௌரவ வேடம், குணச்சித்திர வேடம், நாயகன் வேடம் என எல்லா வேடங்களும் அடக்கம். மிர்ச்சி சிவாவைப் பொறுத்தவரை அவரது நடிப்பில் சுமோ, வெங்கட்பிரபுவின் பார்ட்டி படங்கள் வெளியாக வேண்டும். சலூன், இடியட் என இரு படங்களில் நடித்து வருகிறார்

Also read... Arjun Sarja: அட்வென்ச்சர் ரியாலிட்டி ஷோவுக்கு ஆக்ஷன் கிங் தொகுப்பாளராகிறாரா?

இதை நீங்கள் படிக்கையில் யோகி பாபு மேலும் அரைடஜன் படங்களில் புதிதாக ஒப்பந்தமாகியிருக்கலாம். கண்ணன் மேலும் சில படங்களை இயக்கும் திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம். கொரோனா, லாக் டவுன் ஆகியவை இவர்களை எந்தவகையிலும் பாதிக்கவில்லை என்பது சோர்ந்திருப்பவர்களுக்கு ஊக்கம் தரும் செய்தி.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: