முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / யோகிபாபுவுக்கு ‘பூச்சாண்டி’ காட்டும் நடிகை அஞ்சலி

யோகிபாபுவுக்கு ‘பூச்சாண்டி’ காட்டும் நடிகை அஞ்சலி

யோகி பாபு | நடிகை அஞ்சலி

யோகி பாபு | நடிகை அஞ்சலி

யோகி பாபு - அஞ்சலி நடிக்கும் படத்துக்கு ‘பூச்சாண்டி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு ஏற்கெனவே நயன்தாராவுடன் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படத்தை அடுத்து காமெடி நடிகராக மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

அந்த வகையில் அஞ்சலியுடன் யோகி பாபு நடித்து வரும் படத்துக்கு ‘பூச்சாண்டி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் யோகி பாபு, “மக்களே பேய்கள் முன்னேற்ற கழகத்தில் அட்மிஷன் ஆரம்பித்துள்ளது. அதற்கு சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

சந்தானம் நடித்த ’டிக்கிலோனா’படத்தை தயாரித்த கேஎஸ் சினிஷ் ‘பூச்சாண்டி’ படத்தை தயாரிக்கிறார். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைப்பாளராகவும், மருது ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும் போது நடிகை அஞ்சலி பேயாகவும், அவரைக் காதலிக்கும் நடிகர் யோகி பாபு நடித்திருப்பார் எனவும் தெரிகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரிலீசாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Actress Anjali, Kollywood, Yogi babu