ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH - ஸ்டண்ட் காட்சிகளில் தெறிக்கவிடும் சமந்தா.. மிரண்டுபோன ரசிகர்கள்! வைரல் வீடியோ!

WATCH - ஸ்டண்ட் காட்சிகளில் தெறிக்கவிடும் சமந்தா.. மிரண்டுபோன ரசிகர்கள்! வைரல் வீடியோ!

சமந்தா

சமந்தா

Samantha Stunt Video | ஆக்‌ஷன்-த்ரில்லராக உருவாகியுள்ள யசோதா திரைப்படத்தில் சமந்தா மருத்துவ உலகில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக நடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தனது நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள சமந்தா தற்போது தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து தனக்கான தனி இடத்தையும் பிடித்துள்ளார் என்றே கூறலாம். மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமையும் தந்து வருகிறார் சமந்தா.

சமீபத்தில் முக்கிய வேடத்தில் அவர் நடித்து வெளியான 'பேமிலி மேன் 2' வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் தமிழில் நடித்திருந்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படமும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து யசோதா, சகுந்தலம், விஜய் தேவர்கொண்டாவுடன் குஷி, என அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா. மேலும் ஒரு ஆங்கில படத்தில் நடிப்பதிற்கும் சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். 'Arrangement of Love' என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கும் 'யசோதா' படமானது தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவருகிறது. நவம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இடம்பெற்ற சமந்தாவின் ஸ்டண்ட் காட்சிகள் மக்கள் மத்தியில் முக்கியமாக பேசப்பட்டது. சமந்தாவின் ஸ்டண்ட் காட்சிகள் உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

' isDesktop="true" id="832829" youtubeid="xM5BdrzER0A" category="entertainment">

ஆக்‌ஷன்-த்ரில்லர் படமான இதில் சமந்தா மருத்துவ உலகில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக நடித்துள்ளார்.

நடிகை சமந்தா ஏற்கனவே குத்துச்சண்டை, கிக்-பாக்சிங் ஆகியவற்றில் திறமையானவர், மேலும் பிரேசிலிய ஜியு-ஜிட்சு மற்றும் கலப்பு தற்காப்புக் கலைகளின் (MMA) அடிப்படை பயிற்சிகளையும் எடுத்துள்ளார். இந்த பயிற்சிகள் எல்லாம் தான் இவர் நடித்திருக்கும் 'யசோதா' திரைப்படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது என்றே சொல்லலாம். மேலும் இதைப்பற்றி சமந்தா கூறுகையில் "ஸ்டண்ட் செய்யும்போது ஒரு சாதனை உணர்வு தோன்றுகிறது. நான் இவ்வாறு ஆக்க்ஷன் காட்சிகளில் நடிப்பேன் என்று கற்பனை கூட செய்ததில்லை. 'யசோதா' படத்தின் மூலம் இந்த வகையான படங்களின் மீதான எனது காதல் எனக்கே வெளிப்படையாக தெரியவந்துள்ளது” என்று அவர் கூறினார்.

Also Read : என் அம்மா அழுதுட்டாங்க.. காதல் விவகாரம் குறித்து மனம் திறந்த அனு இம்மானுவேல்!

இந்த திரைப்படம் தொடங்குவதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென்னிடம் சமந்தா விரிவாக பயிற்சி பெற்றார். முன்பு 'தி ஃபேமிலி மேன் 2' படத்தில் சமந்தாவுடன் பணிபுரிந்த பென், அவரது அர்ப்பணிப்புதான் சமந்தாவின் மிகப்பெரிய பலம் என்று கூறியிருக்கிறார். மேலும் "சமந்தாவிற்கு எந்த விதமான கலையை கற்றுக்கொடுத்தாலும் அதை அவர் உள்வாங்கி சிறப்பாக வெளிப்படுத்துவார்" என்றும் பென் தெரிவித்துள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Actress Samantha, Entertainment, Tamil News