முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விபத்தின் விபரீதத்தை உணர்ந்த யாஷிகா ஆனந்த் இனி இதை எப்போதுமே செய்ய மாட்டாராம்!

விபத்தின் விபரீதத்தை உணர்ந்த யாஷிகா ஆனந்த் இனி இதை எப்போதுமே செய்ய மாட்டாராம்!

Yashika Aannand

Yashika Aannand

Yashika Aannand | பொதுவாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பொறுமையாகவும், இனிமையாகவும் யாஷிகா ஆனந்த் பதில் அளிக்கக் கூடியவர். அப்படி, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் அவர் உரையாடியபோது, ரசிகர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் வைரல் ஆகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ் திரையுலக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள வெகுசில நடிகைகளில் யாஷிகா ஆனந்தும் ஒருவர். தனது 14 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர்,  தமிழ் படங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்துள்ளார். குறிப்பாக, அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி போன்றவற்றில் நடித்ததன் மூலமாக இவருக்கான ரசிகர்கள் அதிகரித்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் யாஷிகா ஆனந்தின் வாழ்க்கையில் மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தோழிகள் சகிதமாக காரில் யாஷிகா ஆனந்த் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரோடு டிவைடர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் யாஷிகாவுடன் பயணித்த சக தோழி உயிரிழந்தார். அதே சமயம், யாஷிகாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து, அறுவை சிகிச்சை, மருத்துவமனை என நீண்ட காலம் ஓய்வில் இருந்தார் யாஷிகா ஆனந்த். இதற்கிடையே, சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதையும் அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

பொதுவாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பொறுமையாகவும், இனிமையாகவும் யாஷிகா ஆனந்த் பதில் அளிக்கக் கூடியவர். அப்படி, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் அவர் உரையாடியபோது, ரசிகர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் வைரல் ஆகியுள்ளது.

என் வாழ்க்கையில் இனி அது நடக்காது..

யாஷிகா ஆனந்திடம் ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்று இருந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவர் அவ்வபோது பதிவுகளை வெளியிட்டு வந்தார். ஆனால், சமீப காலமாக என்ஃபீல்டு பைக் குறித்த பதிவுகளை பார்க்க முடியவில்லை. இந்நிலையில், அந்த பைக் இப்போது என்ன ஆனது என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பைக்கை தற்போது தனது சகோதரரிடம் கொடுத்து விட்டதாக யாஷிகா பதில் அளித்தார்.

மேலும், “இப்போதெல்லாம் நான் ரைடு போவதையும், டிரைவிங் செய்வதையும் தவிர்த்து விட்டேன்’’ என்று கூறினார்.

Also Read : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட அட்டகாச படங்கள்!

அப்போது ரசிகர் ஒருவர், “இதற்கு முன்பு ஒருமுறை ரைடு செல்வதும், பைக் ஓட்டுவதும் எனக்கு மிக பிடித்தமானது எனக் கூறியிருந்தீர்களே’’ என்று கேட்டார். அதற்கு யாஷிகா பதில் அளிக்கையில், “ஆமாம். நீங்கள் எல்லோரும் சொல்வதைப் போல நான் எனது உயிர் தோழியை விபத்தில் கொன்றுவிட்டேன். ஆகவே, நான் டிரைவிங் செய்யாமல் இருப்பது நல்லதுதான்’’ என்று பதில் அளித்தார்.

Also Read : மாலத்தீவில் பிகினி உடையில் ஆட்டம் போடும் ரகுல் ப்ரீத் சிங்..

ஆதரவளிக்கும் ரசிகர்கள்..

விபத்து மூலம் ஏற்பட்ட தழும்புகள் யாஷிகா ஆனந்தை மனதளவிலும், உடல் அளவிலும் பாதித்துள்ளன. எனினும், அவரது தீவிர ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். வெகுவிரைவாக முழுமையாக குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளம் மூலம் யாஷிகாவிடம் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Yashika Anand