பிக்பாஸ் பாலாஜிக்கும் எனக்கும் என்ன உறவு? - முதல்முறையாக யாஷிகா பதில்

பிக்பாஸ் பாலாஜிக்கும் எனக்கும் என்ன உறவு? - முதல்முறையாக யாஷிகா பதில்

பிக்பாஸ் பாலாஜி - யாஷிகா

பிக்பாஸ் பாலாஜி உடனான உறவு குறித்த கேள்விக்கு நடிகை யாஷிகா பதிலளித்துள்ளார்.

  • Share this:
தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்து கொண்டிருக்கும் 16 போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். தனக்கு கொடுக்கும் டாஸ்க்குகளை சரியாக செய்தாலும் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளும் இவர் இந்த சீசனின் கடுமையான போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.

மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே தாய், தந்தை அரவணைப்பில்லாமல் வளர்ந்ததாகவும், தனது பெற்றோர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்றும் பிக்பாஸ் வீட்டில் பேசியிருந்தார். அதேவேளையில் பாலாஜியும் மதுகுடிப்பவர் தான் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

மாடலிங் துறையைச் சேர்ந்த ஜோ மைக்கேல் இணையதள ஊடகம் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் “2019-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் யாஷிகா குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக செய்தி வெளியானது. ஆனால் அந்த விபத்துக்குக் காரணம் பாலாஜிதான். அவர் தான் குடித்துவிட்டு காரை ஓட்டி வந்து ஸ்விகி டெலிவரி பாய் மீது மோதினார்.

யாஷிகா அந்த இடத்திலேயே கிடையாது. யாஷிகா தனியாக காரில் சென்று விட்டார். பாலாஜி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி யாஷிகா உள்ளிட்ட நண்பர்களிடம் உதவி கேட்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: தமிழக முதல்வரை சந்தித்த பிக்பாஸ் சரவணன்



பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே யாஷிகாவும் பாலாஜியும் இணைந்து 2017-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனெக்‌ஷன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகிய நிலையில், யாஷிகாவிடம் பாலாஜியுடனான உறவு குறித்து நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் பாலாஜியும் நீங்களும் நண்பர்களா? ஒருவரையொருவர் இன்ஸ்டாகிராமில் கூட பின்தொடரவில்லையே என்ற அந்தக் கேள்விக்கு பதிலளித்த யாஷிகா, “நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஆனால், நான் அவனுக்காக சந்தோஷமடைகிறேன். ஏனென்றால் பலவருடங்களாக இந்த நாட்களுக்காக அவர் ஆசைப்பட்டார் என்பது எனக்குத் தெரியும்.” என்று கூறியுள்ளார்.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: