முடிவுக்கு வரும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் -ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்..

யாரடி நீ மோகினி சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி தொடர் முடிவு வரவுள்ள நிலையில், 2ம் பாகதுக்கான பூஜை போடப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  ஜீ தமிழ் தொலைக்காட்சியின் வெற்றித் தொடராக வலம் வந்த ‘யாரடி நீ மோகினி’ தொடர் 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 1200 எபிசோடுகளைக் கடந்து இன்னும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொடர் விரைவில் முடியப்போகிறது என்ற தகவல் ரசிகர்களை கவலையடையச் செய்திருக்கிறது. குடும்பம், காதலுடன் பேய் கதாப்பாத்திரத்தையும் இணைத்ததால், மற்ற தொடர்களில் இருந்து வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் ‘யாரடி நீ மோகினி’ மாறியது.

  சீரியலில் முதன்மை கதாப்பாத்திரமான ‘முத்தரசன்’ கேரக்டரில் முதலில் சஞ்சீவ் நடித்து வந்த நிலையில், திடீரென அவர் இந்த தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பின்னர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் மக்களிடையே சலிப்பு உணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த தொடரை முடித்துவிட்டு பார்ட் 2 தொடங்கலாம் என தொலைக்காட்சி தரப்பில் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களும் ஏற்கனவே வெளியாகியிருந்தன. அதாவது, யாரடி நீ மோகினி சீரியல் விரைவில் கிளைமாக்ஸை நெருங்க உள்ளதாக தகவல்கள் பரவியது.

  இதனை உறுதிப்படுத்தும் விதமாக சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்களும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் கொடுத்து வந்தனர். இப்போது, சீரியலில் ‘ஸ்வேதா’வாக நடிக்கும் சைத்ரா ரெட்டி போட்டிருக்கும் புகைப்படம் மற்றும் தகவலால் யாரடி மோகினி விரைவில் முடியப்போகிறது என்பதை ரசிகர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.  அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில், சுர்ஜித், ரஞ்சித், பவித்ரன், ஷாலி ரஞ்சன் உள்ளிட்டோர் செல்பிக்கு சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்கின்றனர். இந்தப் புகைப்படத்துக்கு கேப்சன் கொடுத்துள்ள சைத்ரா, ’உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் செய்ய போகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

   
  இதற்கு பதிலளித்த பேயாக நடித்துக் கொண்டிருக்கும் யமுனா’ என்னை மிஸ் பண்ணலயா?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதலளித்த சைத்ரா, நான் சிலவற்றை மட்டுமே இழக்கிறேன் எனக் கூறினேன், என் இனிமைகளை இழப்பதாக கூறவில்லை’ எனத் தெரிவித்து அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளார். சைத்ரா ரெட்டியின் பதிவில் மற்றொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. அதில், ’யாரடி நீ மோகினி’ பார்ட் ஒன்றுக்கு மட்டுமே அவர்கள் என்டு கார்டு கொடுத்துள்ளனர். பார்ட் 2 விரைவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ள நாடகக்குழு, அதற்காக பூஜைபோட்டு படப்பிடிப்புகளையும் தொடங்கியுள்ளது. மிகவும் ரசித்த சீரியல் முடியப்போகிறது என்ற கவலையில் இருந்த ரசிகர்களுக்கு பார்ட் 2 வரப்போகிறது என்ற தகவல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: