• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Yaaradi Nee Mohini: யாரடி நீ மோகினியின் 1200-வது எபிசோட் - கொண்டாடிய நட்சத்திரங்கள்!

Yaaradi Nee Mohini: யாரடி நீ மோகினியின் 1200-வது எபிசோட் - கொண்டாடிய நட்சத்திரங்கள்!

யாரடி நீ மோகினி

யாரடி நீ மோகினி

2017 ஆம் ஆண்டு முதல் யாரடி நீ மோகினி தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

  • Share this:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் யாரடி நீ மோகினி தொடரின் 1200வது எபிசோட்டை எட்டியுள்ளதையடுத்து, நாடகக் குழுவினர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

தமிழ் பொழுபோக்கு தொலைக்காட்சிகளில் அண்மைக்காலத்தில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017 ஆம் ஆண்டு முதல் யாரடி நீ மோகினி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஏறத்தாழ 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. சின்னத்திரையில் முக்கிய பிரபலங்களாக இருப்பவர்கள் பலரும் யாரடி நீ மோகினி தொடரில் நடித்துள்ளனர். கதையில் முதன்மை கதாப்பாத்திரமாக வரும் முத்தரசன் கதாப்பாத்திரத்தில் முதன்முதலாக சஞ்சீவ் நடித்து வந்தார். அவர் விலகியதையடுத்து ஸ்ரீகுமார் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவருடன் இணைந்து பாத்திமா பாபு, சைத்திரா, நக்சத்திரா, சுர்ஜித், தீபா, அரவிந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். காதல், குடும்பம் என மற்ற தொடர்களில் இருப்பதுபோன்ற கதையம்சமாக இருந்தாலும், இதில் கூடுதலாக ஆவி என்ற அமானுஷ்ய கதாப்பாத்திரத்தை நிறுவி ரசிகர்களை கவர்ந்துள்ளனர். கதைப்படி பணக்கார வீட்டுப் பையனான முத்தரசனுக்கு ஏற்கனவே சித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுவதால், முத்தரசனுக்கு அடுத்த கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.







முத்தரசனின் சித்தி அவருடைய அண்ணன் மகளை கட்டிவைத்து சொத்தை அபகரிக்க திட்டமிடுகிறாள். ஆனால், முத்தரசனை சிறு வயது முதல் காதலிக்கும் வெண்ணிலாவை கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என ஆவியாக வரும் சித்ரா நினைக்கிறாள். இதற்கு இடையே நடைபெறும் சூழ்ச்சிகள், காதல், அன்பு என கதைக்களம் விறுவிறுப்பாக நகர்கிறது. அண்மையில் இந்த தொடர் 1200வது எபிசோடை நிறைவு செய்துள்ளது. இதனை நாடகக் குழுவினர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அவரவர் சமூகவலைதள பக்கங்களிலும் யாரடி நீ மோகினி தொடரின் 1200வது எபிசோட் கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

சீரியலில் நடிக்கும் சுர்ஜித், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்துக்கு கீழ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது சாதாரண பயணமல்ல, 1200 எபிசோட்களை நிறைவு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த சக நடிகர்கள் மற்றும் இயக்குநருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் கொடுக்கும் ஏகோபித்த அன்புக்கும் நன்றி எனவும், தொடர்ந்து இதே அன்பையும் ஆதரவையும் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also read... OTT: இந்த படங்கள் எல்லாம் OTT-க்கு செல்கிறதா? திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி!

முத்தரசனாக ஸ்ரீகுமார் கணேஷ், வெண்ணிலாவாக நக்சத்திரா, கவுதமாக சுர்ஜித் அன்சாரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிக எபிசோட்களைக் கடந்த தொடர்களில் ஒன்றாகவும் யாரடி நீ மோகினி உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: