சுருளி தான் தலைப்பா... தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் பட டைட்டில் பற்றி அதிரடி அறிக்கை

தனுஷ்

  • Share this:
தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கி வருகிறார் கார்த்தி சுப்புராஜ். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ஆகவே டி40 என்றே குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

லண்டனில் துவங்கி நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட நடிகர் தனுஷின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.



அதில் பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தோற்றம் போலவே தனுஷும் முறுக்கு மீசையுடன் தோன்றியிருந்தார். மேலும் தனுஷ் போஸ்டரில் அவரது பெயர் சுருளி என்றும் அச்சிடப்பட்டிருந்தது. இதனால் படத்துக்கு சுருளி என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.



இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் படக்குழு, படத்தின் டைட்டில் பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் டைட்டில் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் படக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



Also see:


 
Published by:Sheik Hanifah
First published: