’கர்ணன்’ பற்றி தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாரி செல்வராஜ்!

கர்ணன் படத்தில் தனுஷ்

  • Share this:
‘கர்ணன்’ திரைப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் தனுஷ் அடுத்ததாக பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். தனுஷின் 41-வது படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து தனுஷின் கர்ணன் படத்தையும் வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்த படக்குழு தற்போது 90 சதவிகித படப்பிடிப்பை முடித்திருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும், படத்துக்கு முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட அமைப்புகள் எந்த விதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் நம்மிடம் தெரிவித்தார்.மேலும் படிக்க: மீண்டும் அஜித்துடன்... வலிமை படம் குறித்து ரகசியம் உடைத்தார் யோகி பாபு!
Published by:Sheik Hanifah
First published: