மாஸ்டர் திரைப்படத்தை ஒரே நாளில் எல்லா மொழிகளிலும் திரைக்கு கொண்டுவரும் பணிகள் தீவிரம்!

மாஸ்டர் திரைப்படத்தை ஒரே நாளில் எல்லா மொழிகளிலும் திரைக்கு கொண்டுவரும் பணிகள் தீவிரம்!

மாஸ்டர்

அனிருத் இசையில் இதுவரை வெளியாகியுள்ள பாடல்களும் படத்தின் முன்னோட்டமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இந்த மாஸ்டர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாஸ்டர் திரைப்படத்தை ஒரே நாளில் எல்லா மொழிகளிலும் திரைக்கு கொண்டுவர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதம் 13ஆம் தேதி பொங்கல் பண்டிகையை குறிவைத்து இந்தத் திரைப்படத்தை கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடப்படும் என திட்டமிடப்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக இதுநாள் வரை வெளியாகாமல் உள்ளது. திரைப்படத்தை ஓ டி டி தளங்களில் வெளியிட கடும் போட்டி நிலவும் பொழுதும் திரைப்படத்தை திரையரங்கில் கொண்டுவரவே படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தற்பொழுது 50% ரசிகர்கள் திரையரங்கிற்கு அனுமதிக்கப்படும் நிலையில் அது 100% ஆக உயர்த்தப் பட்ட பின்னர் மாஸ்டர் திரைப் படத்தை வெளியிடுவோம் என படத்தின் தயாரிப்பாளர் லலித் அறிவித்துள்ளார்.

Also read... Gold Rate : தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

மேலும், இந்த திரைப்படத்தை தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து தமிழில் வெளியாகும் அதே தினத்தில் வெளியிட படக்குழுவினர் கடுமையாக முயன்று வருவதால், மாஸ்டர் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான மொழி மாற்றப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி மாதம் 13ஆம் தேதி பொங்கல் பண்டிகையை குறிவைத்து இந்தத் திரைப்படத்தை கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையில் இதுவரை வெளியாகியுள்ள பாடல்களும் படத்தின் முன்னோட்டமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இந்த மாஸ்டர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: