கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.கவில் இணைந்த நடிகை குஷ்பு அங்கிருந்து விலகி 2014-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு அகில இந்திய செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கியது காங்கிரஸ். பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட குஷ்பு சீட் கேட்டார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து 6 வருடம் புறக்கணிக்கப்பட்ட நிலையில் குஷ்பூ இருந்து வந்ததாக கூறினார். இந்நிலையில் குஷ்பு பா.ஜ.கவில் இணைவதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக பா.ஜ.கவில் இணைத்துக்கொண்டார்.
பின்னர் குஷ்பூ திருவல்லிக்கேணி தேர்தல் பொறுப்பாளர் என்ற பதவி கிடைக்கபெற்றதில் இருந்து தொடர்ந்து பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பா.ஜ.கவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தினமும் பிஸியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அவருக்கு திருவல்லிக்கேணி தொகுதியில் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பல்வேறு கட்ட பணிகளை குஷ்பூ அந்த தொகுதி முழுவதும் நாள் தோறும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் குஷ்பூ கணவர் சுந்தர்.சி இன்று பா.ஜ.க அலுவலகத்தில் பா.ஜ.க தலைவர் எல்.முருகனை அவர் மட்டுமே நேரில் சென்று சுமார் அரைமணி நேரம் பேசினார். பா.ஜ.கவில் தன்னை இணைத்துக்கொள்ள சுந்தர்.சி விரும்புவதாகவும் விரைவில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.