முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Siddharth: 8 வருடங்களுக்கு பிறகு எனது தெலுங்கு சினிமா ரசிகர்களை சந்திக்க உள்ளேன்-சித்தார்த் நெகிழ்ச்சி பதிவு..

Siddharth: 8 வருடங்களுக்கு பிறகு எனது தெலுங்கு சினிமா ரசிகர்களை சந்திக்க உள்ளேன்-சித்தார்த் நெகிழ்ச்சி பதிவு..

நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த்

தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் சித்தார்த் நடித்துள்ள மகா சமுத்திரம் திரைப்படம் ஆக்ஸ்டில் வெளியாகுமா என்பது சந்தேகமாக உள்ளது.

  • Last Updated :

சித்தார்த் இப்போது என்ன செய்கிறார் என்று சமூகவலைதளத்தில் புழங்குகிறவர்களை கேட்டால், அவர் இப்போதல்ல எப்போதும் ஒன்றிய அரசையும், மோடியையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார் என்பார்கள். சரி, சினிமாவில்..? சத்தமில்லாமல் மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 

பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் தெலுங்கிலும் பிரபலம். ஒருகட்டத்தில் தமிழைவிட தெலுங்கில் அதிக படங்கள் நடித்தார். பிறகு அங்குள்ள சினிமா அரசியல் காரணமாக தெலுங்குப் படங்களை குறைத்து தமிழில் கவனம் செலுத்தினார். கன்னட லூசியா படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தார். ஜில் ஜங் ஜக், அவள் போன்ற வித்தியாசமான கதைகளில் நடித்து புதிய சிந்தனைக்கு ஆதரவு அளித்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தப் படங்கள் ஓடவில்லை. மலையாளத்தில் அவரது அறிமுகப்படமான கம்மார சம்பவமும் சுமாராகவே போனது. கடைசியாக சித்தார்த் நடிப்பில் படங்கள் வெளியானது 2019 இல். சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை மற்றும் அருவம்

சித்தார்த் நடித்துள்ள டக்கர், சைத்தான் கி பச்சா படங்கள் முடிந்தும் வெளியாகாமல் உள்ளன. அவர் நடிப்பதாக இருந்த இந்தியன் 2 திரைப்படம் பாதியில் நிற்கிறது. இந்நிலையில், சர்வானந்துடன் தெலுங்கில் மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சித்தார்த்

AlsoRead : கல்லூரிக்குப் போகணும்.. நடிகை ஆண்ட்ரியாவின் திடீர் ஆசை

மகா சமுத்திரம் ஒரு ஆக்ஷன் திரைப்படம். அஜய் பூபதி இயக்கியுள்ளார். ஏகே என்டர்டெயின்மெண்ட்ஸ் தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் இதனை தயாரித்துள்ளது. அதிதி ராவ் ஹிதாரி, அனு இம்மானுவல் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆகஸ்ட் 19 படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்
 
View this post on Instagram

 

A post shared by Siddharth (@worldofsiddharth)மேலும் நடிகர் சித்தார்த் மகா சமுத்திரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அதில்’8 வருடங்களுக்கு பிறகு எனது தெலுங்கு சினிமா ரசிகர்களை சந்திக்க உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை முற்றிலுமாக அடங்காத நிலையில், ஆகஸ்டில் திரையரங்குகள் திறக்கப்படுமா, மகா சமுத்திரம் வெளியாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Telugu movie