Rajinikanth: மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த்.?

ரஜினிகாந்த்

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது

  • Share this:
    ரஜினி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அப்படம் மெகா பட்ஜெட் படமாகிவிடும். ரஜினியின் சம்பளமே பாதிக்கு மேல் பட்ஜெட்டை எடுத்துக் கொள்ளும். அதற்கேற்ப தொழில்நுட்பக் கலைஞர்களை போட வேண்டும். பிரமாண்ட தயாரிக்க வேண்டும். இந்தச் செலவுகளை தாக்குப் பிடிக்கும் ஒருசில தயாரிப்பு நிறுவனங்களே தமிழில் உள்ளன. அதில் சன் பிக்சர்ஸ் ரஜினிக்கு ஸ்பெஷல். 2.0 படத்தை தொடங்கிய பின் பட்ஜெட் காரணத்தால் படம் நிறுத்தப்பட்ட போது, அந்த மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்க முன்வந்தவர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். மறக்க முடியாத உதவி. 

    ரஜினியின் புதிய படம் அண்ணாத்தயை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தேசிங் பெரியசாமி இயக்குவார் ஏஜிஎஸ் தயாரிக்கிறது என தகவல் வெளியானது. ஆனால், ஏஜிஸ் ரஜினி படத்தை தயாரிக்கவில்லை, அவர்கள் சின்ன பட்ஜெட் படங்களை தயாரிப்பதில் முனைப்பாக உள்ளனர். அதற்காக தீவிராக கதை கேட்டு வருகின்றனர். ரஜினியின் அடுத்தப் படத்தையும் சன் பிக்சர்ஸே தயாரிக்கிறது என தற்போது தகவல் கசிந்துள்ளது. தேசிங் பெரியசாமியின் பெயர் சொல்லப்பட்டாலும், ரஜினி இன்னும் இயக்குனரை முடிவு செய்யவில்லை என்பதே உண்மை என்கின்றனர்.

    Also read : அடேங்கப்பா! இரு மொழிகளில் நடிக்க 25 கோடி சம்பளமா.. சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்

    இன்னும் சில தினங்களில் ரஜினியின் அடுத்தப் படத்தை தயாரிப்பது யார், இயக்குவது யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: