‘சந்திரமுகி 2' படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பாரா ஜோதிகா?
‘சந்திரமுகி 2' படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பாரா ஜோதிகா?
சந்திரமுகி படத்தில் ஜோதிகா
அவருக்கு திருமணம் முடிந்துவிட்ட காரணத்தால் இரட்டை கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் ஒன்றில் ஜோதிகாவை நடிக்க வைக்க படக்குழு ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதை சமீபத்தில் ராகவா லாரன்ஸ் உறுதி செய்தார்.
மேலும் இந்தப் படத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் பிரதான கதையாக இருக்கும் என்றும் பி.வாசு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் முதல் பாகத்தில் நடித்த மனோதத்துவ மருத்துவராகவே நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா 2-ம் பாகத்திலும் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அவரை சந்திரமுகியாக நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு திருமணம் முடிந்துவிட்ட காரணத்தால் இரட்டை கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் ஒன்றில் ஜோதிகாவை நடிக்க வைக்க படக்குழு ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தேடி நடித்து வரும் ஜோதிகா சந்திரமுகி 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.