• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தி பேமிலி மேன் 2 சீரிஸிற்கு எதிர்ப்பு - சமந்தாவிற்கு நெட்டிசன்கள் கண்டனம்!

தி பேமிலி மேன் 2 சீரிஸிற்கு எதிர்ப்பு - சமந்தாவிற்கு நெட்டிசன்கள் கண்டனம்!

சமந்தா

சமந்தா

முதல் சீஸனில் ஐஎஸ்ஐஎஎஸ் குழுவால் தூண்டப்பட்ட இஸ்லாமியவாத தீவிரவாத தாக்குதல்களை ஸ்ரீகாந்த் திவாரியின் அணி முறியடிப்பதாகக் காட்டப்படும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தி பேமிலி மேன் இந்தியில் எடுக்கப்பட்ட வெப் சீரிஸ். 2019ல் வெளியான இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். The Family Man தொடர் என்பது தேசியப் புலனாய்வு முகமையில் அச்சுறுத்தல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு அணியில் பணியாற்றும் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியின் சாகசங்களைச் சொல்லும் கதை.

முதல் சீஸனில் ஐஎஸ்ஐஎஎஸ் குழுவால் தூண்டப்பட்ட இஸ்லாமியவாத தீவிரவாத தாக்குதல்களை ஸ்ரீகாந்த் திவாரியின் அணி முறியடிப்பதாகக் காட்டப்படும். மற்றொரு பக்கம், ஸ்ரீகாந்தின் குடும்ப வாழ்க்கை மோசமடைந்து கொண்டே போவது குறித்த காட்சிகளும் இடம்பெற்றன. ஸ்ரீகாந்தாக மனோஜ் பாஜ்பாயும் அவரது மனைவி சுசித்ராவாக பிரியாமணியும் நடித்திருந்தனர். இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் சண்டைகள், டெல்லியில் தீவிரவாதிகள் விஷ வாயு தாக்குதல் நடத்தப்படுவது போல காட்சிகள் இருக்கும். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தது.

அமேசான் ப்ரைமில் வெளியான இந்த தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்த சீஸன் எப்போது என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இரண்டாவது சீஸன் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீஸனுக்கான ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் சமந்தாவும் நடித்துள்ளார்.

Also read... நர்ஸ் வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான வீடியோ - மன்னிப்பு கேட்க நடிகர் மாதவன்!

இந்த ட்ரெய்லரில் "நான் எல்லோரையும் கொல்லுவேன்" என சமந்தா பேசுகிறார். இலங்கையின் வரைபடமும் சீருடையில் போராளிக் குழுக்கள் பயிற்சி பெறும் காட்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இலங்கையில் இருந்து வந்த தீவிரவாதிதான் சமந்தா என்றும், ,மனோஜ் பாஜ்பாயி அவரை பிடிக்கும் என்ஐஏ அதிகாரியாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. சமந்தா இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணாக கட்டப்பட்டுள்ளது.


இதையடுத்த தமிழர்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டுள்ளதாக இந்த சீரிஸ்-க்கு எதிராக பலரும் தங்கள் கண்டனங்களை ட்விட்டரில் பதிவுசெய்து வருகின்றனர்.தமிழர்களை தீவிரவாதிகளாக தி பேமிலி மேன் 2 சித்தரிக்கிறது என்று விமர்சனம் குறித்து யூடியூபிலும் பேசப்பட்டு வருகிறது. இதனால் பலரும் இந்த சீரிஸ் குறித்து கொந்தளித்து வருகின்றனர். இதன் விளைவாக #FamilyMan2_against_Tamils என்ற டேக் வைரலாகி வருகிறது.

https://twitter.com/athiyankarthi/status/1394994301029863429?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1394994301029863429%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fathiyankarthi2Fstatus2F1394994301029863429widget%3DTweet

https://twitter.com/athiyankarthi/status1394994301029863429?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1394994301029863429%7Ctwg%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fathiyankarthi2Fstatus2F1394994301029863429widget%3DTweமுன்னதாக இந்த சீரிஸ்ல் நடிப்பது குறித்து பேசிய நடிகை சமந்தா, என்னை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்த அனைவருக்கும் இந்த சீரிஸில் என்னை பார்க்க புதிதாக இருக்கும். நிறைய விதிமுறைகளை நான் இதற்காக தளர்த்தி ஆக்சன் காட்சிகளிலும் நடித்திருக்கேன் என கூறியிருந்தார். ஆனால் தற்போது ட்ரைலரில் சமந்தாவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை ஷேர் செய்து வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: