ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஃபேஷியல் கிரீம் விளம்பரங்களில் நடிக்க மறுத்தது ஏன்? - சாய் பல்லவி பதில்

ஃபேஷியல் கிரீம் விளம்பரங்களில் நடிக்க மறுத்தது ஏன்? - சாய் பல்லவி பதில்

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ரூ.2 கோடி கொடுத்தும் ஃபேஷியல் க்ரீம் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களுக்கான விளம்பரங்களில் நடிக்க மறுத்தது ஏன் என்று நடிகை சாய் பல்லவி விளக்கமளித்துள்ளார்.

  இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பவதாவது, “என் தங்கை பூஜா, நான் அவளை விட கலராக வெள்ளையாக உள்ளேன் என்று நினைப்பாள். கண்ணாடி முன்பு இருவரும் நிற்கும்போது என்னையும், அவளையும் பார்ப்பாள். அதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.

  அவளுக்கு சீஸ், பர்கர் எல்லாம் அதிகம் பிடிக்கும். ஆனால் காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டால் நீ வெள்ளையாக மாறுவாய் என்று கூறியுள்ளேன். அதெல்லாம் அவளுக்கு பிடிக்காது என்றாலும் வெள்ளையாக வேண்டும் என்பதற்காகச் சாப்பிட்டாள். அந்த அளவுக்கு தான் வெள்ளையாக வேண்டும் என்ற எண்ணம் என்னைவிட சிறிய பெண்ணுக்கு உள்ளது.

  எனக்கு விளம்பரத்தில் வரும் பணம் எதற்கு? எனக்குப் பெரிதாக தேவை ஒன்றும் இல்லை. ஆனால் என்னைச் சுற்றியுள்ளவர்கள் எந்த அளவுக்குச் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பது எனக்கு முக்கியம்.

  வெளிநாட்டினரிடம் நீங்கள் ஏன் வெள்ளையாக இருக்கிறீர்கள், அதனால் புற்றுநோய் வரும் தெரியுமா? என நம்மால் சொல்ல முடியாது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களுக்கு கருப்புதான் தோல் நிறம். அவர்கள் தான் அழகாக இருக்கிறார்கள்.

  இதெல்லாம் தெரிந்ததால் மட்டும் பேசவில்லை. நானும் குழப்பத்தில் இருந்ததுண்டு. நான் பிரேமம் படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் நானும் 100 கிரீம்களை முகத்தில் பூசியிருப்பேன். மேக் அப் இல்லாமல், கண் இமையைத் திருத்தாமல் தான் நான் நடித்தேன். பிரேமம் வெளியான முதல்நாளன்று என் அம்மாவிடம் எனது குரல் ஆண் குரல் போல் உள்ளது என்று கூறியிருக்கிறேன்.

  இப்போதும் நான் பேசினால், சார் போனை அம்மாவிடம் கொடுக்கிறீர்களா என்றுதான் கேட்பார்கள். இதனால் பாதுகாப்பின்மையை நானே பலமுறை உணர்ந்துள்ளேன். என்னால் முடிந்தவரை சூழலைக் கொஞ்சம் மாற்றுகிறேன். அதனால் தான் அந்த விளம்பர வாய்ப்பை மறுத்தேன்” என்று கூறியுள்ளார்.

  வீடியோ பார்க்க: விஜய்-ன் வழிக்கு வந்த அஜித்!

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actress sai pallavi