• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’இந்தியன் 2’-ல் இடம்பெறாதது ஏன்? - ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

’இந்தியன் 2’-ல் இடம்பெறாதது ஏன்? - ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

‘இந்தியன் 2' படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைக்காமல் அனிருத் இசையமைக்கிறார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    'இந்தியன் 2' படத்தில் தான் இடம்பெறாதது ஏன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

    கடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. வசூலைக் குவித்து ஹிட் அடித்த இந்தப் படத்தின் 2-வது பாகத்தை 22 வருடங்களுக்குப் பின்பு ஷங்கர் தற்போது இயக்குகிறார். கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

    லைகா நிறுவனத்துடன் இணைந்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் டெல்லி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அனிருத் சங்கருடன் இணைந்து பணியாற்றும் முதல் படமும் இதுவே.

    இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த நிலையில் தற்போது 2-ம் பாகத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தியன் படத்தின் வெற்றியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பங்கு மிக முக்கியமானது. அப்படியிருந்தும் ‘இந்தியன் 2' படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைக்காமல் அனிருத் இசையமைக்கிறார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    பாய் ஃபிரெண்டின் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!



    படத்தில் இடம்பெறாதது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்திருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,  “'இந்தியன் 2'-ல் நான் பணியாற்றவேண்டும் என்று கமல்ஹாசன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். படத்தின் இயக்குநர் சொல்லவேண்டும் என்று கூறினேன். சங்கர் எப்போதுமே புதிய விஷயங்களை தேடிச் செல்வார். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால் போர் அடித்து விடும் இல்லையா?. ஏற்கனெவே 'அந்நியன்', 'நண்பன்' ஆகிய படங்களை போல இது ஒரு சிறிய ப்ரேக். அவ்வளவுதான்.

    2.0 படத்திலேயே எனக்கு அதிக வேலையைக் கொடுத்துவிட்டார். அதனால் எனக்கு மீண்டும் அதுபோன்ற கடினமான வேலையைக் கொடுக்க சங்கர் நினைக்கவில்லை. அதனால் அவர் அனிருத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம்" என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். என்று கூறியுள்ளார்.

    துபாய் பாலைவனத்தில் டிக்டாக் செய்யும் தமிழக அமைச்சர் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: