Home /News /entertainment /

சூரியை ஹீரோவாக தேர்வு செய்தது ஏன்? - வெற்றிமாறன் பதில்

சூரியை ஹீரோவாக தேர்வு செய்தது ஏன்? - வெற்றிமாறன் பதில்

அசுரன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நகைச்சுவை நடிகர் சூரியை நாயகனாக வைத்து வெற்றிமாறன் ஒரு திரைப்படத்தை இயக்க இருந்த நிலையில் அதற்கு முன்னர் சூர்யா நடிக்கும் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

  • News18
  • Last Updated :
    தனது அடுத்த படத்தில் சூரியை ஹீரோவாக தேர்வு செய்தது ஏன் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

    வடசென்னை படத்தை அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் அசுரன். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தாணு தயாரித்துள்ளார். கடந்த 4-ம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

    அசுரனை அடுத்து சூரியை ஹீரோவாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்குகிறார் வெற்றி மாறன். இதுவரை காமெடியனாக பார்த்து வந்த சூரியை வெற்றிமாறன் இயக்கும் படத்தின் மூலம் ஹீரோவாக பார்க்க இருக்கின்றனர்.

    இந்நிலையில் சூரியை ஹீரோவாக தேர்வு செய்தது ஏன் என்று இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், வடசென்னை 2 ஆரம்பித்தால் இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும். அதற்கு முன் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்ட கதையை படமாக இயக்குகிறேன். இறந்துபோன ஒரு தாத்தாவின் இறுதிச் சடங்கு குறித்த கவிதை அது. நடிகர் சூரியிடம் ஒரு எளிமையும், அப்பாவித்தனமும் இயல்பிலேயே இருக்கிறது. அது இந்தக் கதைக்கு உதவும்” என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.

    வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் சாதி அரசியல்... அசுரன் படம் பற்றி வெற்றிமாறன் பேட்டி

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Soori, Vetrimaran

    அடுத்த செய்தி