Home /News /entertainment /

கமலுக்கு ஏன் விருது வழங்கவில்லை - பட்டுக்கோட்டை பிரபாகர் கேள்வி!

கமலுக்கு ஏன் விருது வழங்கவில்லை - பட்டுக்கோட்டை பிரபாகர் கேள்வி!

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

 • News18
 • Last Updated :
  ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்குவதில் அரசியல் நோக்கம் இருக்கிறது என்று கூறும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கமலுக்கு ஏன் வழங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி’ என்கிற சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. இதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார்.

  இதையடுத்து கோவா திரைப்பட விழாவில் தன்னை கவுரவப்படுத்துவதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

  இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஏன் விருது கொடுக்கவில்லை என்ற கேள்வியையும் ஒரு சிலர் முன்வைத்து வருகின்றனர்.

  கமல்ஹாசனுக்கு விருது கொடுக்காதது குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டு பின் நீக்கியுள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் தனது அடுத்த பதிவில் கூறியுள்ளார்.

  அந்த பதிவில், நான் ரஜினிக்கு எதிரானவனோ, கமலுக்கு ஆதரவானவனோ அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

  திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவின் அடையாளம் என்கிற அடிப்படையில் வழங்கப்படும் விருது குறித்து மட்டுமே என் கருத்தைச் சொன்னேன்.

  வசூல் மட்டுமே இந்த விருதுக்கான அளவீடாக இருக்க முடியும் என்று சொல்ல முடியது. தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய மார்க்கெட் உருவானதன் பின்னணியில் நடிகர்கள் மட்டுமே காரணமில்லை. அப்படி ரசிக்கப்பட்ட படங்களின் இயக்குனர்களே முக்கிய காரணம்.

  மத்திய அரசுக்கு இணக்கமாகவே ரஜினி கருத்துக்களை வெளியிட்டு வருவதும், தமிழக பாரதிய ஜனதாவின் முகமாக ரஜினியை கட்டமைக்க அந்தக் கட்சித் தலைவர்களின் விருப்பமும் அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதில் கண்டிப்பாக நோக்கம் இருக்கிறது.

  சினிமாவின் நவீன தொழில்நுட்பங்களை தனது படங்களில் கொண்டுவந்து அதன் மூலம் சினிமாவின் வளர்ச்சியை எப்போதும் சிந்தனையில் கொண்டிருப்பவர் கமல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

  ஆகவே என் பார்வையில் ரஜினியை விடவும் கமல் திரைத்துறை அடையாளமாகத் தெரிகிறார் என்றேன். அதற்காக ரஜினி என்கிற தனி மனிதருக்கோ, நடிகருக்கோ நான் எதிரி என்கிற ரீதியில் சாயம் பூச வேண்டாம்.

  ஒரு மாராட்டியர், கன்னடிகா எப்படி தமிழகத்தை ஆள்வது என்று சீமானும், பாரதிராஜாவும் ரஜினியை எதிர்த்து குரல் கொடுத்தபோது தனித்தனியாக இரண்டு நீண்ட பதிவுகள் போட்டு ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்றவன் நான்.(முன் பதிவுகளைச் சென்று படித்துப் பார்க்கலாம்)

  நான் ரஜினியின் முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், மூன்று முடிச்சு, பாட்ஷா, அன்ணாமலை படங்களை இப்போதும் பல முறை விரும்பி எப்படி பார்க்கிறேனோ.. அதேப் போல கமலின் பல திரைப்படங்களுக்கும் ரசிகன்.

  காவிரிக்காக ஒட்டு மொத்த திரையுலகமே கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து நெய்வேலிக்குச் சென்று போராட புறப்பட்டுச் சென்றபோது தனி மனிதராக சேப்பாக்கத்தில் அடையாள உண்ணாவிரதமிருந்த ரஜினியை நேரில் மேடைக்குச் சென்று வாழ்த்தியவன் நான்.” என்று கூறியுள்ளார்.

  முன்னதாக கமல்ஹாசனுக்கு விருது வழங்காதது குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஃபேஸ்புக் பதிவை ‘இந்து தமிழ் திசை’ தளம் செய்தியாக செய்தியாக பதிவிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, "குழந்தை நட்சத்திரமாக தன் கலைப் பயணத்தைத் துவங்கி, தன் வளர்ச்சிக்காகப் பொழுது போக்குப் படங்களையும், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகப் பரிசோதனை முயற்சிகளையும் 60 வருடங்களாக மாறி மாறி கொடுத்து, தன் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி சமூக சேவை செய்ய வைத்து, இன்று அரசியல் களத்திலும் குதித்து முரட்டு ஓட்டு வங்கிகள் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுக்கு நடுவில் மாற்று ஆட்சிக்கான விதையை விதைத்து அந்த லட்சியத்தை நோக்கிச் சோர்ந்து போகாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கமல்ஹாசன் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தகுதியானவரா அல்லது......?" என்று பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.

     வீடியோ பார்க்க: யார் இந்த சிங்கப்பெண்கள்?

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Kamal hassan

  அடுத்த செய்தி