பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான் - கமல் சூசகம்

பிக் பாஸ் 4 தமிழ்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
பிரபல தனியார் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 82 நாட்களைக் கடந்துள்ளது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, ரேகா, ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி, அர்ச்சனா ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில், தற்போது ஒன்பது போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் உள்ளனர். எனவே, இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த வாரம் அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் அனிதா தான் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார் என்ற தகவல் நிலவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து சின்னச் சின்ன விஷயங்களைப் பெரிதாக மாற்றி அதற்காக சண்டைகள் போட்டதால், அனிதா மீது ரசிகர்களுக்கு அதிருப்தி இருந்தது.

Also read: பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது அனிதாவா?

ஆனால், இந்த நிகழ்ச்சியில் எந்த குரூப்பிலும் சேராமல், தனது கருத்துகளை முன்வைப்பதிலும், தன்னிச்சையாக விளையாடிய போட்டியாளர்களின் அனிதாவும் ஒருவர். ஆனால், இந்த வாரம் ஆரியிடம், அனிதா நடந்துகொண்ட விதம் மற்றும் பாலாஜியுடனான வாக்குவாதத்தில்போது நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன் என அனிதா கூறியது அவர் மீது மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் குறைந்த வாக்குகள் பெற்று அனிதா வெளியேற வாய்ப்புகள் உள்ளது.


இந்த நிலையில், இன்று வெளியான முதல் ப்ரமோவில், இதுகுறித்து கமல் நாசூக்காக பேசியுள்ளார். அதில், நீங்க தப்பு பன்னீங்கன்னு சுட்டிக்காட்டுனா நான் மட்டுமா தப்பு பண்ணினேன் என வாக்குவாதம் செய்கிறார்கள். இன்னும் மூன்று வாரங்களே உள்ளது. அவர்கள் தப்பை அவர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ? நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்பது நீங்கள் ஓட்டுப்போடும் முறையிலே தெரிகிறது. மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும் நேரமும் நெருங்கிவந்துவிட்டது என கமல் கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: