முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Vijay TV Serial : நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசை கொலை செய்தது யார்? விரைவில் வெளியாகப்போகும் உண்மை..

Vijay TV Serial : நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசை கொலை செய்தது யார்? விரைவில் வெளியாகப்போகும் உண்மை..

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசை கொலை செய்தது யார்? என்ற ரகசியம் விரைவில் வெளியாக உள்ளதாக புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் உட்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது. முத்துராசைக் கொலை செய்தது யார்? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இந்தக் கொலை வழக்கில் கைதான மாயன், முத்துராசை கொலை செய்தது தான் என கூறிக் கொண்டிருக்கிறார். கோர்ட்டிலும் அதே பதிலைக் கூறினார். தற்போது அவர் ஜாமினில் வெளியே வந்திருந்தாலும், முத்துராசு கொலை வழக்கை காவல்துறை அதிகாரி கார்த்திக் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

முத்துராசை மாயன் கொலை செய்யவில்லை என உறுதியாக நம்பும் காவல்துறை அதிகாரி கார்த்திக், யார் கொலை செய்தார்கள் என்ற உண்மையை கண்டுபிடிக்க பல கோணங்களிலும் விசாரணை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார். மாயனிடமே, நீ முத்துராசைக் கொலை செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும், யார் கொலை செய்தார்கள் என்று கூறிவிடு என நேரடியாக கேட்டபோதும், அவர் உண்மையைக் கூறவில்லை.

யாரையோ மறைக்க கொலைப்பழியை நீ சுமந்து கொண்டிருக்கிறாய், நீ கொலை செய்தாய் என்றால் முத்துராசுவின் பாடி எங்கே எனக் கேட்க, தற்கு மாயன் தெரியாது என பதிலளிக்கிறார். இதனால் கடுப்பான காவல் துறை அதிகாரி கார்த்திக், சரியான பாபநாசம் குடும்பமாக இருக்கிறது என கூறிவிட்டு, விரைவில் கண்டுபிடிப்பேன் என சவால் விட்டு, விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்.

PHOTOS : இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரியாமணி -போட்டோஸ்

இந்த நேரத்தில் மாயனுக்கு வரும் மர்ம அழைப்பில் முத்துராசைக் கொலை செய்தது யார்? என எனக்குத் தெரியும் என ஒருவர் கூறுகிறார். குடும்பத்தினர் அனைவருக்கும் முத்துராசுவின் போட்டோவை அனுப்பும் அவர், எப்போது கால் செய்தாலும் எடுக்க வேண்டும் எனக் கூறுகிறார். முதலில் அந்த அழைப்புகளை அலட்சியமாக எதிர்கொள்ளும் மாயன், பின்னர் அதிர்ச்சியைடைந்து யார் அந்த நபர்? என்ற யோசிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் அந்த நபர் மாசாணி என தெரியவருகிறது.

Also Read : கலர்ஸ் தமிழ் சீரியல் நடிகை ரேஷ்மாவுக்கு விரைவில் திருமணம்..அவரே சொன்ன அப்டேட்..

அவர், முத்துராசு கொலை செய்யப்பட்ட அன்று அணிந்திருந்த சட்டையை காண்பித்தவுடன், அதிர்ச்சியின் உச்சத்துக்கே மாயன் செல்கிறார். இனி ஒவ்வொரு நாளும் உங்களை வாட்ச் செய்து கொண்டே இருப்பேன் என மாசாணி கூறுகிறார். இந்த விவரத்தை நாச்சியாரிடம் தெரிவிக்க முற்படும்போது, அவரது மகள்கள் பிறந்தநாள் கேக் கொண்டு வந்து விழா கொண்டாடுகின்றனர். இந்த நேரத்தில் மாயன் எப்படி சொல்வது என தவிக்கிறார்.

' isDesktop="true" id="521511" youtubeid="QK3vUBdeKv0" category="entertainment">

இந்நிலையில், முத்துராசுவைக் கொலை செய்தது யார்? என்ற ரகசியம் விரைவில் வெளியாகப்போவதாக விஜய் டீவி புரோமோ வெளியிட்டுள்ளது. காவல்துறை சந்தேகிக்கும் அந்த ஒரு நபர் யார்? என குறிப்பிட்டு, மாயன், நாச்சியார், கத்தி, ஐஸ்வர்யா, காயத்திரி, சரண்யா, மகா, சிதம்பரம் ஆகியோரது பெயரை வெளியிட்டுள்ளது. இதனால், இந்த சீக்ரெட்ஸூக்கான ட்விஸ்டு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv