• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் இனி இந்த நடிகையா? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் இனி இந்த நடிகையா? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

சரண்யா திரிவேதி

சரண்யா திரிவேதி

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்றால் கதிர் மற்றும் முல்லை ஜோடி தான். இதில் இனி முல்லைக்கு பதிலாக சரண்யா திரிவேதிதான் நடிக்க போவதாக தவல்கள் வெளியாகியுள்ளது.

  • Share this:
    விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்றால் அது கதிர் மற்றும் முல்லை ஜோடி தான். முல்லை கதாபாத்திரத்தில் பிரபல நடிகை விஜே சித்ரா நடித்திருந்தார். இவர்களுக்காகவே இந்த சீரியல் செம டிஆர்பி பெற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் திடீரென சித்ரா நேற்று முன் தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ்


    மேலும் படிக்க...சித்ரா தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம்- காவல்துறை

    இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்திற்கு பதிலாக சரண்யா திரிவேதி நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.



    என்னதான் சரண்யா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொளவார்களா..



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: