ஆங்கரிங்கில் கவர்ந்த ரியோ இன்று பிக் பாஸ் இறுதிப் போட்டியாளராக...

பிக் பாஸ் ரியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’கனா காணும் காலங்கள்’ தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

 • Share this:
  இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்கள் பட்டியலில் ரியோ ராஜும் ஒருவர். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்ற இவரின் ஆரம்ப காலம் மிகுந்த வேதனைக்குரியது.

  ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரியோ ராஜ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’கனா காணும் காலங்கள்’ தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு சன் மியூஸிக்கில் தொகுப்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ’சுட சுட சென்னை’, ‘கல்லூரி காலம்’ உள்ளிட்ட லைவ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ரியோவுக்கு நிறைய பெண் ரசிகைகள் கிடைத்தனர். அதன் பிறகு கல்லூரி விழாக்கள், நடன விழாக்கள் என பிஸியானார்.

  ஆங்கரிங்கை தொடர்ந்து, நடிப்பிலும் ஆர்வம் காட்டிய ரியோ விஜய் டிவியில் ஒளிப்பரபான சரவணன் மீனாட்சி சீரியலில் 3 ஆவது சீசனில் சரவணாக நடித்தார். அந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடவே ரியோ ராஜ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவராக மாறினார். அதோடு ஜோடி நம்பர் 1 சீசன் 9-ன் இறுதிப் போட்டியாளராகவும் இருந்தார்.

  இதையடுத்து சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு நகர்ந்தார் ரியோ. சத்ரியன் திரைப்படத்தின் மூலம் அவர் சினிமாவில் அறிமுகமானார். அதில் நடிகர் விக்ரம் பிரபுவின் நண்பராக நடித்தார். இருப்பினும், 2019-ஆம் ஆண்டில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த தமிழ் நகைச்சுவை திரைப்படமான ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது ரம்யா நம்பீசனுடன் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

  ரியோவின் காதல் மனைவி ஸ்ருதி ராஜ். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். மகளை 6 மாத கைக்குழந்தையாக விட்டு விட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார் ரியோ. பாசப் போரட்டத்தைத் தாண்டி அங்கு 100 நாட்களைக் கடந்திருக்கிறார்!



  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: