பிக் பாஸ் சீசன் 4-ன் சர்ச்சை நாயகன் - யார் இந்த பாலாஜி முருகதாஸ்?

பாலாஜி முருகதாஸ்

2017-ல் மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் பெர்ஃபெக்ட் பாடி போன்ற பட்டங்களை வென்ற பிறகு ஃபேஷன் துறையில் புகழ் பெற்றார்.

 • Share this:
  பிக் பாஸ் சீசன் 4-ல் 100 நாட்களைக் கடந்து இறுதிப் போட்டியாளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் பாலாஜி முருகதாஸ். ஹவுஸ்மேட்டை மட்டுமில்லை ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிரவைத்துள்ள இவர், தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியிருக்கிறார்.

  சென்னையைச் சேர்ந்த பாலா எஸ்.ஆர்.எம் கல்லூரியில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பல்வேறு மாடலிங் பட்டங்களை வைத்திருக்கும் இவர், அழகு போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்திருக்கிறார். அதோடு இரண்டு ஸ்டார்ட்-அப்களின் இணை நிறுவனரும் கூட. மேலும், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் டெட் பேச்சாளராகவும் இருந்து வருகிறார். தவிர மணீஷ் மல்ஹோத்ரா போன்ற மிகச் சிறந்த பேஷன் டிசைனர்களுக்கும், ரேம்ப் வாக் செய்திருக்கிறார்.

  பல்வேறு அழகு போட்டிகளில் கலந்துகொண்டு தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார் பாலா. 2017-ல் மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் பெர்ஃபெக்ட் பாடி போன்ற பட்டங்களை வென்ற பிறகு ஃபேஷன் துறையில் புகழ் பெற்றார். 2018-ஆம் ஆண்டில் ருபாரு மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியாவை வென்றதோடு, மிஸ்டர் இன்டர்நேஷனல் 2019 போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

  இதையடுத்து டைசன் படம் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளராகவும் உள்ளார். ஷிவானியுடனான நெருக்கம், ஆரியுடன் சண்டை என பல சர்ச்சைகளில் பாலாவின் பெயர் அடிப்பட்டது. அதையெல்லாம் தாண்டி இறுதிப் போட்டியாளராக முன்னேறியிருக்கிறார் பாலாஜி முருகதாஸ்!  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: