Home /News /entertainment /

பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர் ஆரியின் அறியப்படாத பக்கம்!

பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர் ஆரியின் அறியப்படாத பக்கம்!

பிக் பாஸ் ஆரி

பிக் பாஸ் ஆரி

நடிகர், சமூக ஆர்வலர், விவசாயப் பிரியர் என அறியப்பட்ட ஆரி இனிமேல் பிக் பாஸ் ஆரி எனவும் அழைக்கப்படுவார்.

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் நான்காம் சீசனின் இறுதிப் போட்டியாளர்களாக ஆரி, பாலாஜி, சோம், ரியோ, ரம்யா பாண்டியன் ஆகிய 5 போட்டியாளர்கள் இருந்தனர்.

  இந்நிலையில் சோம் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும், 4 மற்றும் 5-ம் இடத்தைப் பிடித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். தற்போது ஆரி, பாலாஜி, சோம் ஆகிய மூவரில் யார் டைட்டிலை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த ஆரி, அதிக வாக்குகளைப் பெற்று இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆவார் என நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

  மக்களின் மனதைக் கவர்ந்த இந்த ஆரி யார்?

  நடிகர், சமூக ஆர்வலர், விவசாயப் பிரியர் என அறியப்பட்ட ஆரி இனிமேல் பிக் பாஸ் ஆரி எனவும் அழைக்கப்படுவார். தமிழ் சினிமாவில் 'நெடுஞ்சாலை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆரிக்கு, தியேட்டர் ஆர்டிஸ்ட், உடல் மாற்றப் பயிற்சியாளர் என பல முகம் உண்டு.

   

  Who is Aari Arjunan, Bigg boss aari, bigg boss tamil 4 grand finale on vijay tv
  திருமணத்தின் போது...


  பிப்ரவரி 12, 1985-ல் பழனியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஆரி அர்ஜுனன், தனது ஆரம்பக் கல்வியை அங்குள்ள அக்‌ஷயா அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். இலங்கையில் பிறந்து லண்டனில் பணிபுரிந்துக் கொண்டிருந்த நதியாவை நவம்பர் 18, 2015 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

  சினிமா அறிமுகம்

  உடல் மாற்றப் பயிற்சியாளராக தனது கரியரை தொடங்கிய ஆரி, ‘பாடி ஸ்கல்ப்டிங்’கில் கவனம் செலுத்தியிருக்கிறார். பாடி ஸ்கல்ப்டிங் எனும் உடல் மாற்றக் கலை என்பது தேவைப்படும் சமயத்தில் நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது. திரைப்படங்களில் நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப உடலை வடிவமைத்துக்கொள்வது பாடி ஸ்கல்ப்டிங் முறை மூலம் தான்.

  இதன் மூலம் ‘ஆட்டோகிராப்’ சேரன், 'சுப்பிரமணியபுரம்' சசிகுமார், 'யோகி' அமீர், 'மிருகம்' ஆதி, 'கற்றது தமிழ்' ஜீவா, 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்திபன், 'ஈரம்' சிந்து மேனன் என பலருக்கும் சினிமாவில் பயிற்சி கொடுத்திருக்கிறார் ஆரி.

  இதன் மூலம் தனது ஆடும் கூத்து படத்தில் ஆரிக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார் சேரன். படம் தியேட்டரில் வெளியாகாவிட்டாலும், தேசிய விருது பெற்றது. அதன் பிறகு இயக்குநர் ஷங்கர் தயாரித்த ‘ரெட்ட சுழி’ படத்தில் அஞ்சலியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இப்படி சினிமாவில் பிஸியாகிக் கொண்டிருந்த சமயத்தில் விவசாயத்தின் பக்கமும் ஆரியின் கவனம் சென்றிருக்கிறது. இதற்குக் காரணம் 2017-ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம்.

  விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், ‘மாறுவோம்... மாற்றுவோம்!' என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் முதல் முனைப்பாக ‘நானும் ஒரு விவசாயி' என்ற திட்டத்தை நடிகர் கமல்ஹாசனை வைத்து தொடங்கினார். அதோடு தாய்மொழி மீது கொண்ட பற்றால், “தாய்மொழியில் கையொப்பம் இடுவோம்” என்ற இயக்கத்தை 2018-ல் தொடங்கினார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல லட்சம் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார்!  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Aari Arjunan, Bigg Boss, Bigg Boss Tamil 4, Vijay tv

  அடுத்த செய்தி