பிக்பாஸ்: நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் நபர் - வீடியோ

news18
Updated: September 14, 2018, 5:27 PM IST
பிக்பாஸ்: நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் நபர் - வீடியோ
பிக்பாஸ்
news18
Updated: September 14, 2018, 5:27 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவாரத்திற்கு செல்லும் போட்டியாளரை அறிவிக்கும் புரமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்ட பிக்பாஸ்2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது 7 பேர் எஞ்சியுள்ளனர். இவர்களுடன் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற சினேகன், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட சிலரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த வாரம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் வெற்றி பெறும் போட்டியாளர் நிகழ்ச்சியின் இறுதிவாரத்திற்கு நேரடியாக செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொருக்கும் குவளை நிறைய தண்ணீர் கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட இடத்தை சுற்றி வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த டாஸ்க்கில் விஜயலட்சுமி, யாஷிகா, ஜனனி ஆகியோர் இறுதிச் சுற்று வரை போராடினர். ஒருகட்டத்தில் விஜயலட்சுமி வெளியேற ஜனனியும், யாஷிகாவும் விடாமல் போராடினர். இறுதியாக ஜனனி, யாஷிகா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் இருவரில் ஒருவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிவாரத்திற்கு நேரடியாக செல்லும் வாய்ப்பை பிக்பாஸ் வழங்கியுள்ளார். இவை அனைத்தும் நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்ட புரமோ வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன.இதைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் உற்சாகத்துடன் பாடல் ஒன்றிற்கு நடனமாடும் வீடியோவையும் நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...