Bharathi Kanamma: பாரதி கண்ணம்மா சீரியலில் மறைந்த நடிகர் வெங்கட் நடித்த கேரக்டரில் நடிக்க போகும் புதிய நடிகர்!

பாரதி கண்ணம்மா சீரியல்

செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் வெங்கட், விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

  • Share this:
ஸ்டார் விஜய் டிவி-யில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற சீரியல்களில் மிக முக்கியான சீரியல் பாரதி கண்ணம்மா. விஜய் டிவியில் சினிமா டைட்டில்களை வைத்து சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, ராஜா ராணி2, மௌன ராகம், மௌன ராகம் 2, கடைக்குட்டி சிங்கம், வேலைக்காரன் உள்ளிட்ட ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகின, ஒளிபரப்பாகியும் வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சினிமா பட டைட்டிலான "பாரதி கண்ணம்மா"-வை வைத்து இந்த சீரியல் விஜய் டிவி-யில் துவக்கப்பட்டது.

சின்னத்திரை ரசிகர்களின் வரவேற்பை இந்த சீரியல் ஏற்கனவே பெற்றிருந்தாலும், கடந்த 2019ம் ஆண்டு முதல் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தாலும், இந்த சீரியல் ஹீரோயினான கண்ணம்மா வயிற்றில் குழந்தையுடன் பல கிலோ மீட்டர்கள் நடையாய் நடந்து சென்ற சீன்கள் சோஷியல் மீடியாவில் மீம்ஸாக ஷேர் செய்யப்பட்டு வைரலானது.

Also Read:  உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டிய நபர்கள் யார் தெரியுமா?

இதனை அடுத்தே அதுவரை இந்த சீரியலை பார்க்காமல் இருந்த சின்னத்திரை ரசிகர்கள் கூட, அதன் பிறகு பாரதி கண்ணம்மா சீரியலை தற்போது வரை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். விஜய் டிவி சீரியல்களில் டிஆர்பி ரேடிங்கில் உச்சத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான். இந்த சீரியலில் பாரதியாக நடிகர் அருண் பிரசாத், கண்ணம்மாவாக நடிகை ரோஷினி ஹரிபிரியன் தாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் கண்ணம்மா மற்றும் அஞ்சலி ஆகியோரின் தந்தையாக சண்முகம் என்ற கேரக்டரில் நடிகர் வெங்கட் என்கிற வெங்கடேஷ் நடித்திருந்தார்.

Also Read:   ஒரு பெண்ணை லைஃப் பார்ட்னராக்க ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் வெங்கட், விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து உறவுகள், சங்கமம், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த வெங்கட், பீட்சா, சூதுகவ்வும், தெகிடி போன்ற படங்கள் மூலம் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார். சின்னத்திரையில் பெரும்பாலும் தந்தை கேரக்டரை ஏற்று தன் இயல்பான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த நடிகர் வெங்கட் வரும் எதிர்பாராத வகையில் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இந்த திடீர் மரணம் பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினருக்கு மட்டுமின்றி, சின்னத்திரை ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.



 




View this post on Instagram





 

A post shared by @vijaytvserial_






நடிகர் வெங்கட்டின் மறைவிற்கு பிறகு கண்ணம்மாவின் தந்தை கேரக்டரை காட்டாமலேயே கதை நகர்ந்து வருகிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மாவில் நடிகர் வெங்கட் நடித்து வந்த சண்முகம் கேரக்டரில் நடிக்க வேறு ஒரு நடிகர் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈரமான ரோஜாவே சீரியலில் மறைந்த நடிகர் வெங்கட் நடித்து வந்த நடராசன் கேரக்டரில் நடித்து வருபவரே பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மாவின் தந்தையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரின் பெயர் முத்துக்குமார சுவாமி என்றும் குறிப்பிடப்படுகிறது.
Published by:Arun
First published: