ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பா.ரஞ்சித் இயக்கத்தில் எப்போது நடிப்பீர்கள்?: விஜய்சேதுபதியின் அசத்தல் பதில்

பா.ரஞ்சித் இயக்கத்தில் எப்போது நடிப்பீர்கள்?: விஜய்சேதுபதியின் அசத்தல் பதில்

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இயக்குநர் ரஞ்சித்துடன் நட்பில் இருப்பதாலேயே அவருடன் இணைந்து படம் பண்ண முடியாது என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

புதுமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘96’. இத்திரைப்படம் குறித்த கலந்துரையாடல் வளசரவாக்கத்தில் உள்ள கூகை திரைப்பட இயக்கத்தின் நூலகத்தில் நடைபெற்றது. பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், தமிழ் பிரபா, இயக்குனர் வசந்தபாலன் மற்றும் வாசுகி பாஸ்கர் ஆகியோர் கல்ந்துகொண்டு இத்திரைப்படம் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய விஜய் சேதுபதி உதவி இயக்குனர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள், அறிவுரைகளை வழங்கினார். மேலும் ‘96’படத்தில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இயக்குனர் தன்னிடம் கதை சொல்லிய நேரத்தியிலிருந்துதான் தோன்றியதாகவும், திரைக்கதையை விட நடிகர்களுக்கு கதையை புரிய வைப்பதில்தான் படத்தின் வெற்றி உள்ளது எனவும் விஜய் சேதுபதி கூறினார்.

தொடர்ந்து பேசிய வர் 96 படத்தின் கதைபோல் தனக்கும் காதல் இருந்ததாகவும், அப்போது பயந்து நடுங்கி டேக் போகாமலேயே சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

பா.ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "யாருடைய இயக்கத்தில் வேண்டுமானாலும் கதை பிடித்திருந்தால் நடிக்கலாம். என்னை ரஞ்சித்திடம் அறிமுகப்படுத்தியத்தியது நடிகர் தினேஷ்தான். ரஞ்சித் மிகவும் உணர்ச்சிகரமானவர். நான் காலா படம் பார்த்துவிட்டு அவரை தொடர்பு கொண்டேன். இப்படி ஒரு படம் எடுத்ததற்கு , இந்தப் புண்ணியத்திற்கு நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று கூறினேன். உழைக்கும் வர்க்கத்திலிருந்து வரும் ஒருவருக்குத் தான் காலா படத்தில் இடம்பெற்ற வசனங்களை எழுத முடியும். எனக்கு நிறைய படங்கள் இருக்கிறது. அவருக்கும் எனக்கும் தோன்றும் நேரத்தில் பணியாற்றுவோம். சினிமாவில் உணர்வுப்பூர்வமாக இயங்க முடியாது. எனக்கும் '96' பட இயக்குநர் பிரேம்குமாருக்கும் 11 வருட நட்பு இருந்தது. ஆனால் எமோஷனுக்கோ நட்புக்காகவோ படம் பண்ணவில்லை” என்று கூறினார்.

First published:

Tags: 96 movie, Actor vijay sethupathi, Kaala, Pa. ranjith, Vijay sethupathi